பெங்களூர் சென்னை அதிவிரைவுச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெங்களூர் சென்னை அதிவிரைவுச் சாலை
Bangalore - Chennai Expressway
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்: 240 km (150 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: ஒசகோட்டே, பெங்களூர் ஊரகம், கர்நாடகம்
To: திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
Location
States: கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் & தமிழ்நாடு
Highway system

பெங்களூர் சென்னை அதிவிரைவுச் சாலை ( The Bangalore-Chennai Expressway ) என்பது பெங்களூர் (கர்நாடகம்) மற்றும் சென்னை (தமிழ்நாடு) இடையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அதிவிரைவுச்சாலை ஆகும். இது ஆறுவழிப்பாதையாகவும், ஒசகோட்டா முதல் திருப்பெரும்புதூர்வரை 240 கி.மீ நீளம் கொண்டதாகவும் இருக்கும். இந்தச் சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வரை செல்லலாம்.[1]

பயன்கள்[தொகு]

பல தொழில்துறை மையங்களை அடுத்த திட்டங்களை பானவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு டிவிஎஸ் பிரேக் உற்பத்தி அலகு துவக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா, பஜாஜ், மற்றும் நிசான் குழுக்கள் அந்த பகுதியில் புதிய உற்பத்தி மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளன.

வாய்ப்புகள்[தொகு]

நிலவிற்பனையாளர்கள் ரகசியமாக வாலாஜாபேட்டை அருகில் உள்ள (பானவாரம், கீழ்வீராணம்) இடங்களில் அடுத்த தொழில்துறை மையமாக உருவாக வாய்ப்ள்ளதாக கருதி இது போன்ற இடங்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். சப்பனீய முதலீட்டாளர்கள் இந்த சாலையின் துறைமுக இணைப்பு சாலைகளில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். சப்பனீய நிலவணிக நிறுவனங்களான நிப்பான் எக்ஸ்பிரஸ்வே லிமிடெட் போன்றவை பண்ணையூர் மற்றும் கீழ்வீராணம் போன்ற கிராம்ப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் நடத்திவருகின்றன. இந்த பகுதிகளில் கவனம் செலுத்த முதலீட்டாளர்கள் ஊக்கமாக உள்ளனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHDP) திட்டத்தை 6 பகுதிகளாக அமைக்க, புதிய அரசாங்கத்தின் ஈடுபாடு சம்பந்தமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் காரணமாக நிலத்தின் மதிப்பு மற்றும் விலை முக்கியமாக ராணிப்பேட்டை - பொன்னப்பன் தாங்கள் - அரக்கோணம்[2] (தமிழ்நாடு ) [3] போன்ற பகுதிகளில் உயர்ந்துவருகிறது.

செலவுகள்[தொகு]

இதற்கான திட்டச் செலவு ஏறக்குறை INR38.4 பில்லியன் (US$) இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. [4][5]

நீட்டிப்பு[தொகு]

இந்திய தேசிய அதிவிரைவு பாதைக்கான முன்மொழிவுகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செய்துள்ளது. அதில் அரசு பெங்களூர்-மங்களூர் கிரீன்ஃபீல்ட் அதிவிரைவுச்சாலை உள்ளது. [6] பெங்களூர் வழியாக மங்களூர்-சென்னை அதிவிரைவுச் சாலைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]