பெங்களூரு ரோசு வெங்காயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூரு ரோஜா வெங்காயம் (Bangalore rose onion), என்பது உள்ளூரில் குலாபி ஈருள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் விளையும் வெங்காயமாகும். இந்த வெங்காயத்திற்கு 2015ஆம் ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.[1]

சந்தை நிலைப்பாட்டில் பெங்களூர் வெங்காயம் உயர்ந்தது

வரலாறு[தொகு]

பெங்களூர் ரோசு வெங்காயம் பெங்களூர் நகரம், பெங்களூர் கிராமப்புறம், சிக்கபள்ளாபூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.[1] இவை தும்கூர், ஹாசன், தாவண்கரே, தார்வாட் மற்றும் பாகல்கோட் ஆகிய இடங்களிலும் விளைவிக்கப்படுகின்றன. இந்த வெங்காயம் இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் பயிரிடப்படுவதில்லை.[2]

தோற்றம் மற்றும் பயன்பாடு[தொகு]

இந்த வகை வெங்காயத்தில் தட்டையான அடித்தளத்துடன் கூடிய குமிழ்கள் கோள வடிவத்தில் உள்ளன. இவற்றின் தனித்துவமான குணாதிசயங்களாக அடர் கருஞ்சிவப்பு சிவப்பு நிறம், ஆந்தோசயினின், பினால் மற்றும் உயர்ந்த மணம் போன்றவை கருதப்படுகின்றன. இவற்றில் அதிக அளவு புரதம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கரோட்டின் இருப்பதாகவும் அறியப்படுகிறது.[1]

ரோஜா வெங்காயத்தை வளர்ப்பதற்கான சிறந்த நிலைமைகள்: 6.5 முதல் 7 வரை கார அமிலத்தன்மை உள்ள மண், வளிமண்டல ஈரப்பதம் 70 முதல் 75%, சராசரி வெப்பநிலை 25°C முதல் 30°C வரை. இந்த வாழிடச்சூழல் பெங்களூர் பகுதியினைச் சுற்றிக் காணப்படுவதால், இங்கு இவை பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. [1]

இந்த வெங்காயத்தின் பண்பு காரணமாக இவை ஊறுகாய்களில் பயன்படுத்த ஏற்றதாக உள்ளன.

ஏற்றுமதி[தொகு]

பெங்களூர் ரோஜா வெங்காயம் இந்தியாவில் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம், வங்களாதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.[3][4]

2010–11 நிதியாண்டில், 22,000 டன் பெங்களூர் ரோஜா வெங்காயம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2003-04 மற்றும் 2005-06ஆம் ஆண்டுகளில் முறையே ஏற்றுமதி செய்யப்பட்ட 36,000 மற்றும் 32,000 டன்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தது. விவசாய ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட்ட பின்னர் ஐந்து ஆண்டுகளில் ரோஜா வெங்காயம் 500 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[5][2]

புவியியல் குறியீடு[தொகு]

பெங்களூர் ரோஸ் வெங்காயத்திற்கு 2015ல் புவியியல் குறியீடு வழங்கப்பட்டது. இது சிக்கபள்ளாப்பூரை தலைமையிடமாகக் கொண்ட பெங்களூர் ரோஸ் வெங்காயம் வளர்ப்போர் சங்கம் பல்வேறு வகைகளை வளர்ப்பதற்கான காப்புரிமை உரிமைகளைப் பெற அனுமதித்தது.[3]

மேலும் காண்க[தொகு]

  • பெங்களூர் நீலம்
  • இந்தியாவில் புவியியல் குறிகாட்டிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Prasad S, Shyam (6 April 2015). "Bangalore Rose Onion gets GI tag". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  2. 2.0 2.1 Urs, Anil (2 August 2011). "Bangalore rose onion exports touch 22,000-tonnes mark". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  3. 3.0 3.1 Prabhu, Nagesh (17 January 2012). "Know your onions about Bangalore Blue and Rose". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  4. Kundapura, Vishwa (26 October 2013). "Rose onion farmers in distress as prices crash". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  5. Urs, Anil (30 November 2006). "Rose onion exports rise 28%". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.