பெங்களூரு புல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெங்களூரு புல்ஸ் (Bengaluru Bulls, BGB) கருநாடக மாநிலம் பெங்களூரு நகரை மையமாகக் கொண்டு புரோ கபடி கூட்டிணைவில் விளையாடும் சடுகுடு அணியாகும். அணியின் தற்போதைய தலைவர் சுரேந்தர் நாடா மற்றும் தலைமை பயிற்றுனர் ரந்திர் சிங். கோசுமிக் குளோபல் மீடியா என்ற நிறுவனம் இவ்வணியின் ஒப்போலை உரிமையைப் பெற்றுள்ளது.[1]

அணி வரலாறு[தொகு]

புரோ கபடி கூட்டிணைவு இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக்கை ஒத்த வடிவமைப்பில் விளையாடப்படும் தொழில்முறை சடுகுடு கூட்டிணைவு போட்டிகளாகும். இந்தியாவின் வெவ்வேறு நகரங்களின் எட்டு அணிகளுடன் இதன் முதல் பதிப்பு 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெங்களூரு அணிக்கான ஒப்போலை உரிமையை கோசுமிக் குளோபல் மீடியா என்ற நிறுவனம் பெற்றது.

முடிவுகள்[தொகு]

பதிப்பு இடம்
2014 நான்காம் இடம்
2015 இரண்டாம் இடம்
2016 சனவரி ஏழாம் இடம்
2016 சூன் ஆறாம் இடம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூரு_புல்ஸ்&oldid=2274164" இருந்து மீள்விக்கப்பட்டது