பெங்களூரில் உள்ள சோழர் கோவில்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழப் பேரரசானது தென் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமை வாய்ந்த அரச மரபுகளில் ஒன்றாக இருந்தது. பெங்களூரை சோழர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரையிலும் ஆட்சி செய்தனர். சோழர்களின் அதிகாரத்தின் மையப்பகுதியாக காவேரி ஆறு பாயும் வளமான வடிநிலப் பகுதி என்றாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது இன்றைய பெங்களூர் உட்பட பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்தனர். முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சியின் போது, ​​கி.பி. 1004 ஆம் ஆண்டில், சோழர்கள் மேற்கு கங்காவதியை தோற்கடித்த பிறகு பெங்களூரையும் கைப்பற்றினர். இவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், பெங்களூரில் உள்ள சொக்கநாதஸ்வாமி கோயில், முக்தி நாதேஸ்வரா கோயில், சோழீஸ்வரர் கோவில், சோமேஸ்வரா கோயில் போன்ற பல கோயில்களைக் கட்டினார்கள். பெங்களூரின் டொம்லூர் சோமேசுவரர் கோயிலின் பழமையான கல்வெட்டுகளானது கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு[1] முற்பட்டவை ஆகும். இதுவே பெங்களூர் நகரின் பழமையான கோவிலாகும்.[2] முதலிலில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலானது அதன் பின்னர் போசளர் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களால் புதுப்பிக்கப்பட்டது.[3] இக்கோயிலில் முதலில் சிவபெருமான் மட்டுமே இருந்தார் ஆனால் பின்னர் உள்ளூர் வைணவர்களுக்காக விஷ்ணு கோவில் கட்டப்பட்டது.

சோழர்களின் ஆட்சியில் இருந்த கர்நாடகத்தின் கங்க நாட்டின் பகுதியானது கி.பி. 1117 இல் ஹொய்சாலர்களிடம் இழந்தனர். ஆனால் கிழக்கு கங்கவடியானது (மைசூர் மாவட்டப் பகுதி) விக்ரமா சோழனின் காலமான கி.பி. 1125 இல் சோழர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும் கன்னட நாட்டில் சோழர் ஆட்சிப் பகுதிகள் மூன்றாம் குலோத்துங்க சோழர் காலம் வரை நீடித்தது. கர்நாடகத்தில், குறிப்பாக மைசூர் மாவட்டத்தில் உள்ள தமிழர் குடியிருப்பானது சோழர் காலத்திற்கு பின்பும் தொடர்ந்து இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் சைவ சமயமானது ஆழமாக வேரூன்றி உள்ளதற்கு முதன்மைக் காரணம் சோழர் ஆட்சியே. ஹொய்சள அரசர்கள் தங்கள் நாடு முழுவதும் சோமேஸ்வரா கோயில்களைக் கட்டினர். பொதுவான சோமேஷ்வரர் கோவிலில் ஒரு தாமரைக் குளம் அமைக்கப்படும்.

மடவாளத்தில் உள்ள சோமேஸ்வர ஆலயம் கி.பி. 1247 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[4] பெங்களூர் நகரத்தில் பழமையான கோயில்களில் ஒன்றாக அல்சூர் சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு பிரதான தெய்வம் நந்தி என்றாலும், பிரம்மா மற்றும் விஷ்ணு போன்ற மற்ற கடவுள்களும் இங்கே வணங்கப்படுகிறார்கள்.[5] பின்னர் இக்கோயிலானது கெம்பே கௌடாவால் புதிப்பிக்கப்பட்டு இராஜகோபுரம், மதில்சுவர் போன்றவை கட்டப்பட்டன.[6] பசவனங்குடியில் உள்ள 800 வருட வயதான காளிகாம்பள் கமாடீஸ்வரார் கோயிலானது பெங்களூர் நகரத்தின் இரண்டாவது பெரிய கோயிலாகும்.[7] கோயில்களானது சமய வளர்ச்சியைத் தவிர அறிவார்ந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன இதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

பெங்களூரில் உள்ள சோழர் கோவில்களின் பட்டியல்[தொகு]

எண். பெயர் இடம் காலம்/ஆரம்பகால கல்வெட்டு ஆதாரம்.
1 சொக்கநாதசுவாமி கோவில் தொம்மலூரு கி.பி. 10 ஆம் நூற்றாண்டு [1]
2 சோமேசுவரர் கோயில் (அலசுரு) ஹலசுரு [8]
3 காசி விசுவேசுவரர் கோவில் கடுகோடி
4 வசந்த வல்லவர் கோவில் வசந்தபுரா
5 ஆனந்த லிங்கேசுவர கோவில் ஹெபால்
6 ஈசுவர கோயில் கெங்கேரி கி.பி. 1050 [9]
7 தர்மேசுவரர் கோவில் கொன்றஹள்ளி கி.பி. 1065 [10]
8 மடுறம்மா கோவில் ஹுஸ்கூர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு [11][12]
9 முக்தி நாதீசுவரர் கோவில் ப்பின்னமங்கலா கி.பி. 1110
10 சோமேசுவரா கோவில் மடவாளம் கி.பி. 1247 [4]
11 காளிகாம்ப கமாதேசுவரா கோவில் நாகரத்பெட் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு [13]
12 சோமேசுவரா சுவாமி கோவில் அகரா 1500 ஆண்டுகள்
13 சோமேசுவரா கோயில் மார்த்தஹள்ளி கி.பி. 1508 [14]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 Priyanka S Rao (19 May 2012). "Chokkanatha: The city's oldest temple". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/bangalore/article524984.ece?. பார்த்த நாள்: 26 August 2014. 
  2. U B, Githa. "A Chola temple in Domlur!". டெக்கன் ஹெரால்டு. Archived from the original on 4 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Priyanka S Rao (16 May 2012). "History on the walls of a temple". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/bangalore/article229458.ece?. பார்த்த நாள்: 22 August 2014. 
  4. 4.0 4.1 "Ancient temple; bustling junction". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  5. "Souvenir of the Chola dynasty". The New Indian Express. 2 January 2010 இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140826120315/http://www.newindianexpress.com/cities/bangalore/article217380.ece. பார்த்த நாள்: 22 August 2014. 
  6. S. K. Aruni (11 October 2013). "The kalyani that holds a 1,000-year history". தி இந்து. http://www.thehindu.com/news/cities/bangalore/the-kalyani-that-holds-a-1000year-history/article5222113.ece. பார்த்த நாள்: 22 August 2014. 
  7. MK Madhusoodan. "Heritage temple in ruins; govt unmoved". DNA Syndication. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  8. Dynamics of Language Maintenance Among Linguistic Minorities: A Sociolinguistic Study of the Tamil Communities in Bangalore. Central Institute of Indian Languages, 1986. பக். 7. https://books.google.com/books?id=hyViAAAAMAAJ&q=chola+++temple+ulsoor&dq=chola+++temple+ulsoor. 
  9. Patrao, Michael (2 February 2009). "A place of historical significance". DeccanHerald இம் மூலத்தில் இருந்து 13 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131213075931/http://archive.deccanherald.com/Content/Feb22009/metromon20090201115918.asp. பார்த்த நாள்: 26 August 2014. 
  10. Saligrama Krishna Ramachandra Rao (1993). Art and architecture of Indian temples. Kalpatharu Research Academy. பக். 222. https://books.google.com/books?id=AphNAAAAYAAJ. 
  11. Mysore & Padmanabha 1973, ப. 247.
  12. Rao 1993, ப. 214.
  13. Madhusoodan, MK (16 January 2011). "Heritage temple in ruins; Karnataka government unmoved". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். http://www.dnaindia.com/bangalore/report-heritage-temple-in-ruins-karnataka-government-unmoved-1495106. பார்த்த நாள்: 27 August 2014. 
  14. S.K. Aruni (11 January 2012). "Of inscriptions and the medieval period". தி இந்து. http://www.thehindu.com/news/cities/bangalore/of-inscriptions-and-the-medieval-period/article2793088.ece. பார்த்த நாள்: 26 August 2014.