உள்ளடக்கத்துக்குச் செல்

பெக்கி லின்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெபெக்கா குயின் [1] (Rebecca Quin (பிறப்பு: சனவரி 30, 1987) ர்ன்பவர் ஓர் ஐரிய தொழில்முறை மற்போர் வீரர் ஆவார். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ரா பிரிவில் விளையாடி வருகிறார். பெக்கி லென்ச் எனும் மேடைப் பெயரால் அறியப்படும் இவர் தற்போது ரா பெண்கள் வாகையாளராக உள்ளார்.

சூன் 2002 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை மற்போர் வீரராக பயிற்சி செய்து வந்தார்.துவக்கத்தில் அவ்வப்போது அவரது சகோதரருடன் ரெபெக்கா நாக்ஸ் எனும் மேடைப் பெயரில் அயர்லாந்தில் விளையாடிய இவர் பின்பு ஐரோப்பியா மற்ரும் வட அமெரிக்காவில் தனி நபராக விளையாடினார். எலைட் கனடியன் வாகையாளர் போட்டியில் விளையாடியதன் மூலம்  பரவலாக அறியப்பட்டார். சூன் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் கேர்ல்ஸ்  வாகையாளர் போட்டியின் முதல் வாகையாளர் இவர் ஆவார்.

செப்டமபர் 2006 இல் செருமனியில் நடைபெற்ற ஒரு தொழிற்முறைப் போட்டியில் தீவிர தலைவலி காரணமாக சில காலம் தொழிற்முறை மற்போரிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். பின்பு 2012 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமானார். துவக்கத்தில் இதன் துணை நிறுவனமான என் எக்ஸ் டி யில் விளையாடிய இவர் 2015 இல் முக்கியப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். பின்பு சுமாக்டவுன் பிரிவில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் வாகையாளர் போட்டி 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாக்லேஷ்  நிகழ்ச்சியில் இவர் வாகையாளர் பட்டம் பெற்றார். இவர் மூன்று முறை பெண்கள் வாகையாளர் பட்டம் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்மர்சிலாம் போட்டியில் கார்மெல்லாவுடன் இணைந்து சார்லட் ரிக் பிளயரைத் தாக்கியதன் மூலம் இவரின் மற்போர் வாழ்கையில் முக்கிய நிகழ்வாக மாறியது அப்போது இவர் தெ மேன்  எனத் தன்ன்னை அறிவித்துக் கொண்டார். அதன் பிறகு இவரின் ரசிகர்கள் இவ்வாறே அழைக்கத் துவங்கினர். சனவரி 2019 இல் நடைபெற்ற பெண்கள் ராயல் ரம்பிள் போட்டியில் வெற்றி பெற்றார். ஏப்ரல் 7 இல் நடைபெற்ற ரெசில்மேனியா போட்டியில் முதல்முறையாக தலையங்க செய்தியாக இடம்பெற்றார். பின்னர் வின்னர் டேக்ஸ் ஆல் எனும் போட்டியில் ராண்டா ரவுசி மற்றும் சார்லட் ரிக் பிளயர் மற்றும் இவர் பங்கேற்ற போட்டியில் இவர் வெற்றி பெற்று ரா பெண்கள் வாகையாளர் மற்றும் சுமாக்டவுன் பெண்கள் வாகையாளர் பட்டம் ஆகிய இரண்டு வாகையாளர் பட்டங்களையும் ஒரே சமயத்தி வெற்றி பெற்றார். இந்த இரு பட்டங்களையும் ஒரே சமயத்தில் வைத்திருந்த பெண் வீரர் எனும் சாதனை படைத்தார்.மேலும் இதுவரையில் நான்கு முறை இவர் பென்கள் வாகையாளர் பட்டம் பெற்றுள்ளார்.

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்[தொகு]

ரா[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வீரர்களை மாற்றம் செய்ததன் மூலம் லேசி இவான்ஸ் ரா பிரிவிற்கு மாற்றப்பட்டார். சில பகை காரணமாக இவர் தொடர்ச்சியாக பெக்கி லென்ச்சினை தாக்கினார்.[2][3][4] இருந்தபோதிலும் பெக்கி சுமாக்டவுனில் சார்லட் ரிக் பிளயருடன் மோதலில் ஈடுபட்டு வந்தார்.[5][6] அப்போது நடைபெற்ற மணி இன் தெ பேங்க் நிகழ்ச்சியில் இவர் லேசி இவான்சுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ரா பெண்கள் வாகையாளர் பட்டத்தினைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால் சுமாக்டவுன் பெண்கள் வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் இவான்சின் குறுக்கிட்டதால்  அந்தப் போட்டியில் இவர் தோல்வியடைந்தார்.[7]

சான்ருகள்[தொகு]

  1. Campbell, Brian (23 September 2016). "WWE's Becky Lynch: McGregor knows what he's doing". ESPN. Archived from the original on 24 December 2018. பார்க்கப்பட்ட நாள் 23 December 2018.
  2. Trionfo, Richard (8 April 2019). "WWE Raw Report: Title Versus Title, The Man Has A New Challenger?, Dean's Last Match, And More". PWInsider. Archived from the original on 14 April 2019. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  3. Carapola, Stuart (9 April 2019). "WWE Smackdown Report: Kofi's Celebration, Sami Pulls A Lacey, Tag Title Match Times Two, And More". PWInsider. Archived from the original on 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019.
  4. Trionfo, Richard (15 April 2019). "WWE Raw Report: A Lot Of New Faces, A Number One Contender For Becky, Sami Has Fun With Montreal, And More". PWInsider.
  5. Trionfo, Richard (22 April 2019). "WWE SMACKDOWN REPORT: CALL HER BECKY TWO MATCHES, A NEW DAY FOR BIG O?, ROMAN HAS AN OPPONENT FOR MITB, AND MORE". PWInsider.
  6. Trionfo, Richard (30 April 2019). "WWE SMACKDOWN REPORT: THE MEN AND WOMEN ARE ANNOUNCED FOR MITB, BAYLEY VERSUS BECKY, AND MORE". PWInsider.
  7. "411MANIA". Becky Lynch Loses One Of Her Women’s Titles, Then Bayley Cashes In at Money in the Bank (Pics, Video).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கி_லின்ச்&oldid=2866588" இலிருந்து மீள்விக்கப்பட்டது