பெகுனி
தோற்றம்
பெகுனி | |
| பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
|---|---|
| தொடங்கிய இடம் | வங்கதேசம்[1][2] |
| பகுதி | வங்காளம் |
| தொடர்புடைய சமையல் வகைகள் | வங்காளதேச சமையல்|வங்காளதேசம், இந்திய சமையல்|இந்தியா |
| முக்கிய சேர்பொருட்கள் | கத்தரிக்காய், கடலை மாவு, உப்பு, சமையல் எண்ணெய் |
பெகுனி (Beguni) என்பது ஒரு பொதுவான பெங்காலி சிற்றுண்டி ஆகும். இது கத்திரிக்காயை துண்டுகளாக நறுக்கி, கடலைமாவு கலவையில் நனைத்து எண்ணெயில் பொரித்து தயாரிக்கப்படுகிறது.இந்த உணவு வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா போன்ற கிழக்கு மாநிலங்களில் பிரபலமாக உள்ளது.[3] [4]

குறிப்பாக ரமலான் காலத்தில் இது அதிகமாக தயாரிக்கப்படுகிறது.பெகுனி தயாரிப்பில், கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்த கடலைமாவு கலவையில் மூழ்கடித்து, கடுகு எண்ணெயில் ஆழ் பொரிப்பாக பொரிக்கின்றனர்.[5]இது ஆண்டுதோறும் ஒரு வழக்கமான சிற்றுண்டியாக மட்டுமல்லாமல், ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் உணவில் முன்னோட்ட உணவாக அல்லது பக்க உணவாகவும் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Beguni – Bangladeshi Aubergine Fritters Recipe - Great British Chefs". www.greatbritishchefs.com (in ஆங்கிலம்). Retrieved 19 March 2026.
- ↑ "Beguni Traditional Vegetable Dish From Bangladesh". www.tasteatlas.com. Retrieved 19 March 2026.
- ↑ Jane Grigson (2007). Jane Grigson's Vegetable Book. U of Nebraska Press. p. 46. ISBN 978-0-8032-5994-2.
- ↑ Sally Miller (2008). Contemporary Caribbean Cooking. Miller Publishing Co. Ltd. p. 18. ISBN 978-976-8079-75-6.
- ↑ Uses of Tropical Grain Legumes: Proceedings of a Consultants Meeting, 27-30 Mar 1989, ICRISAT Center, India. ICRISAT. 1991. pp. 108, 335. ISBN 978-92-9066-180-1.