பூ மனமே வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூ மனமே வா
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புநளினி
கதைஇராஜ சுப்பிரமணியன்
இசைசிற்பி (இசையமைப்பாளர்)
நடிப்புராமராஜன்
சங்கீதா
ஒளிப்பதிவுஏ. கார்த்திக் ராஜா
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்நளினி சினி ஆர்ட்ஸ்
விநியோகம்காண்டனெண்டல் எண்டர்பிரைசஸ்
வெளியீடு30 ஏப்ரல் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூமனமே வா (Poomaname Vaa) என்பது 1999 ஆம் ஆண்டய தமிழ் காதல் நடகத் திரைப்படமாகும். வி. அழகப்பன் எழுதி இயக்கிய இப்படத்தில் ராமராஜன், சங்கிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈஸ்வரி ராவ், மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை சிற்பி மேற்கொண்டார். படம் 1999 ஏப்ரலில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்தை ராமராஜனின் மனைவியான நளினி ராமராஜன் நளினி சினி ஆர்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தார். தயாரிப்பின் போது, இந்த படம் ராமராஜனின் 40 வது படம் என்றும், இயக்குநரின் 11 வது படம் என்றும் அறிவிக்கபட்டது. ஆனால் வி. அழகப்பனுக்கு பின்னரே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. படத்தில் முதலில் சந்திரசேகர், மனோரமா, சந்தான பாரதி போன்ற நடிகர்களும் நடிப்பார்கள் என அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் இறுதியில் அவர்கள் இடம்பெறவில்லை.[3]

வெளியீடு[தொகு]

1990 களின் பிற்பகுதியில் ராமராஜனின் பல படங்களைப் போலவே, பூமனமே வா மற்றும் அண்ணன் படங்களும் தாமதமாகவே வெளிவந்தன. அதே நேரத்தில் சுவலட்சுமியுடன் சத்தியத் தாய், சங்கவியுடன் தம்பிக்கு தாய் மனாசு மற்றும் கண்ணுப்படப் போகுது போன்ற படங்களின் படப்பிடிப்பகள் கைவிடப்பட்டன.[3]

இசை[தொகு]

படத்திற்கான இசையை சிற்பி மேற்கொண்டார்.[4][5]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 தில்லு வேணும்டா புஷ்பவனம் குப்புசாமி கங்கை அமரன்
2 என்னைத் தொட்டு விட்டு எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா பழனி பாரதி
3 இதயம் திறந்து கல்பனா
4 காது குளிர சுவர்ணலதா, எஸ். பி. பாலசுப்பிரமண்யம்
5 காஞ்சிபுரம் ஸ்வர்ணலதா, கீதா
6 நம்மா மாப்பிள்ளைக்கு மனோ
7 நெஞ்சுக்குள்ள சசிதரன்

குறிப்புகள்[தொகு]

  1. Cinema Pokkisham (24 July 2017). "POO MANAMEA VAA [மக்கள் நாயகன் ராமராஜன்]" – via YouTube.
  2. Cinema Pokkisham (25 September 2017). "POO MANAME VAA TAMIL MOVIE SONGS [மக்கள் நாயகன் ராமராஜன்]" – via YouTube.
  3. 3.0 3.1 "A-Z (V)". 27 September 2013. Archived from the original on 27 September 2013.
  4. "Poo Maname Vaa". Spicyonion.com.
  5. "Poo Maname Vaa Songs". mio.to. Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_மனமே_வா&oldid=3691206" இலிருந்து மீள்விக்கப்பட்டது