உள்ளடக்கத்துக்குச் செல்

பூ. மாணிக்கவாசகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூ. மாணிக்கவாசகம்
பிறப்புபூலித்துரை மாணிக்கவாசகம்
(1947-05-12)12 மே 1947
ஆண்டிபட்டி, திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்), இந்தியா
இறப்புசூலை 12, 2026(2026-07-12) (அகவை 79)
தொழில்நாவலாசிரியர்
சிறுகதை
எழுத்தாளர்
மொழிதமிழ்
குடியுரிமைஇந்தியர்
வகையதார்த்தவாதம்
கருப்பொருள்இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிறகு
வெக்கை
வரப்புகள்
வாய்க்கால்
அஞ்ஞாடி

பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் இயற்பெயர் கொண்ட பூமணி (12 மே 1947 - 12 சூலை 2026) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய 'அஞ்ஞாடி' புதினத்துக்கு 2014-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார் பூமணி. இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]

இலக்கியப் பணி

[தொகு]

கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971-இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.

ஆக்கங்கள்

[தொகு]

சிறுகதைத் தொகுப்பு

[தொகு]
  • வயிறுகள்
  • ரீதி
  • நொறுங்கல்கள்
  • நல்லநாள்

புதினங்கள்

[தொகு]

திரைப்படம்

[தொகு]

சிறப்புகள்

[தொகு]
  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விருதுகள்

[தொகு]

இறப்பு

[தொகு]

பூமணி 2026 சூலை 12 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு தனது 79-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.dinamani.com/india/2014/12/20/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5/article2580521.ece
  2. "பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது". BBC News தமிழ். 2014-12-19. Retrieved 2026-07-13.
  3. இணையதளச் செய்திப், பிரிவு (2026-07-13). "எழுத்தாளர் பூமணி காலமானார்". தினமணி (in Tamil). Retrieved 2026-07-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._மாணிக்கவாசகம்&oldid=4598993" இலிருந்து மீள்விக்கப்பட்டது