பூ.சா.கோ மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூ. சா. கோ. மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம்(PSG Institute of Medical Science and Research) தமிழ்நாட்டில் கோவையில் அமைந்துள்ள ஒர் தனியார் மருத்துவக் கல்லூரியாகும். இது தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. இதன் பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளை இந்திய மருத்துவக் கழகம், பிரித்தானிய மருத்துவக் கழகம் மற்றும் ஸ்ரீலங்கா மருத்துவக் கழகம் அங்கீகரித்துள்ளன.

கோவையின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பூ.சா.கோ அறக்கட்டளை தனது அறுபதாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் பகுதியாக 1985ஆம் ஆண்டு மருத்துவக் கல்வித்துறையில் தடம் பதித்தது. செப்டம்பர் 30, 1985 அன்று பூ.சா.கோ மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பில் சேர்கின்றனர்.

வெளியிணைப்புகள்[தொகு]