பூவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Memecylon|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பூவை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Memecylon
இனம்:
இருசொற் பெயரீடு
Memecylon edule
Roxb.

காயா, பூவை (Memecylon edule) என்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய பசுமையான மரமாகும். குறிப்பாக இந்தியாவில் குறிப்பாக கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களை பெரும்பான்மையாக கொண்ட தக்காணப் பீடபூமி பகுதியியலும், தாய்லாந்து மற்றும் போர்னியோவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பொதுவான பெயர்களாக காயாம், Delek bangas, Delek ஏர், miat, nemaaru போன்றவை அடங்கும்.

இந்த மரமானது பாறை மண்ணில் வளரக்கூடியது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பூக்கும். இதன் கனியானது ஒரு சென்டிமீட்டர் நீளமும் பச்சை நிறமும் கொண்டதாக இருக்கும். இது பழுக்கும்போது சிவப்பு நிறமாகவும், பின்னர் கருப்பு நிறமாகவும் மாறும். இந்த மரம் மெல்லிய பட்டையைக் கொண்டது, எனவே இது சில நேரங்களில் மலாய் மொழியில் "மெல்லிய தோல்" என்ற பொருள்படும் நிபிஸ் குலிட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரம் ஒரு அலங்காரத் தாவரமாகவும், கட்டுமானப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தண்டு வலியது. விறகாகப் பயன்படும். வறண்ட பசிய இலைக் காடுகளில் வளர்கிறது. 4500 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் வளரும். மிமிசைலான் என்ற இப்பேரினத்தில் 18 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன.[1]

இதன் இலைகள் தோல்போன்று தடிமனாக இருக்கும். இந்த மரமானது குளுக்கோசைடுகள், பிசின்கள், வண்ணமயமான நிறமிகள், பசைகள், மாப்பொருள் மற்றும் மாலிக் அமிலம் போன்றவை உள்ளன. மேலும் இது அலுமினியம் நிறைந்தது. இதிலிருந்து மஞ்சள் வண்ண சாயத்தை பிரித்தெடுக்கலாம். இதன் இலைகள் மற்றும் வேர்கள் இரத்தக்கழிசல், துவர்ப்பு போன்றவற்றுக்கான மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியங்களில்[தொகு]

காயா என்னும் புதர்ச்செடியைக் 'காயா' எனக் கபிலரும் (குறிஞ். 70) 'பூவை' எனச் சீத்தலைச் சாத்தனாரும் (அகநா. 134), 'பறவாப் பூவை' எனக் கடுவன் இளவெயினனாரும் அழைப்பர்.

காயா பூத்திருக்கும் நிலையில் மயிற்கழுத்து போன்று பளபளப்பான நீலநிறமாக இருக்கும். இதன் மலரின் அகவிதழ்களுக் கடியில் செந்நிறம் காணப்படும்.பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த இதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும். மழையின் தண்மை கண்டு வெளிப்படும் 'தம்பலப் பூச்சி' எனப்படும் செந்நிறமான மூதாய்ப்பூச்சி, குறுகுறுவென அங்குமிங்கும் ஒடித் திரியும். இக்காட்சி, மணிமிடை பவளம் போல அணி மிக இருந்தது என்கிறார் புலவர். அகநானுாற்றில் மணிமிடை பவளம் என்ற சொற்றொடர் நித்திலக்கோவை'ப் பகுதியில் (அகநா: 304) அமைந்துள்ளவாறு.

பசும்பிடி வகுளம் பல்லினர்க்காயா' என்றார் குறிஞ்சிக் கபிலர் (குறிஞ். 70) பல்லினர்க்காயா என்பதற்கு நச்சினார்க்கினியர் பல கொத்துக்களை உடைய காயாம்பூ' என்று உரை கூறினார். காயாம்பூச் செடியைச் சிறுபுதர் எனலாம். இது கொத்துக் கொத்தாகப் பூக்கும். பூக்கள் மிக அழகிய பளபளப்பான நீல நிறமுள்ளவை. மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் இருக்கும். இச்செடி பூத்திருக்கும் காட்சியை இடைக்காடனார் இரண்டு அகநானுாற்றுப் பாடல்களில் சித்திரிக்கின்றார். முல்லை நிலத்தில் நல்ல மழை தொடங்கியுள்ளது. பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த நீலக் காயா மலர்கள் விழுந்துள்ளன. மழையைக் கண்டு மண்ணிலிருந்து வெளிப்படும் தம்பலப் பூச்சி எனப்படும் மூதாய்ப் பூச்சிகள் அவற்றினிடையே குறுகுறு என ஊர்ந்து செல்கின்றன. நீல மலர்களிடையே சிவந்த மூதாய்ப் பூச்சிகள் தோன்றும் காட்சி. மணிமிடை பவளம் போல அணிமிக இருந்ததென்கிறார் புலவர்.

மணிமிடைபவளம்போல அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
புலன் அணி கொண்ட கார் எதிர்காலை (- அக. 304 : 13-16)

காயாம்பூ இற்றை நாளில் காசாம்பூ என வழங்கப்படுகிறது. இதன் கருநீலநிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது. இதற்கு அஞ்சனி, காசை வச்சி என்ற பெயர்களை நிகண்டுகள் சூட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் இதன் மற்றொரு பெயர் பூவை என்பதாகும். பூவை என்னும் சொல், நாகணவாய்ப்புள்ளையும் காயாவையும் குறிக்கும். பறக்கும் இப்புள்ளினத்தினின்றும் பிரித்துக் காட்டுதற்கு இதனைப் பறவாப்பூவை என்றார் கடுவன் இளவெயினனார்.[2]

இப்பூ முல்லை நிலத்தது; செந்நில வழியிற் பூக்கும். சிறுபான்மை குறிஞ்சியிலும் பூக்கும்; கார் காலப்பூ; காலையில் பூத்து இரவில் உதிரும்; குற்றுச் செடியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்; இதன் முனை அரும்பு கருமையானது. மலர்ந்தால் இப்பூ மயிற்கழுத்து போன்று பளபளக்கும் நீல நிறத்தது. வீழ்ந்து வாடினால் கருமையாக இருக்கும். மலர் மெல்லியது; மனமுள்ளது: காண்போர் உள்ளங்கவர்வது என்றெல்லாம் புலவர் பெருமக்கள் விதந்து கூறுவர்.

காயாம்பூ நீலநிறமானது. நீலமணி போன்றது. இது மணி என்னும் அடைமொழியுடன் கூறப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன் பக்கம் 332-352
  2. பறவாப் பூவைப் பூவினாயே -பரி. 3:73
  3. மணிபுரை உருவின் காயாவும் (கலி. 101: 5)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவை&oldid=2866476" இலிருந்து மீள்விக்கப்பட்டது