பூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூவே செம்பூவே
பூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை
 • போலீஸ்
 • குடும்பம்
எழுதியவர்ஜா.தீபா
திரைக்கக்தைவிசாலினி ரமணி
கதைஆண்டனி சார்லஸ்
இயக்குனர்மனோ பாலாஜி
நடிப்பு
 • மௌனிகா
 • ஷமிதா
 • நியாஸ் கான்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆண்டனி சார்லஸ்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம்
ஒளிபரப்பு
சேனல்கலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்5 ஆகத்து 2019 (2019-08-05) –
ஒளிபரப்பில்

பூவே செம்பூவே என்பது கலைஞர் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1] லைட் சவுண்ட் மற்றும் மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இயக்குனர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்குனர் மனோ பாலாஜி என்பவர் இயக்க, மௌனிகா தைரியமானா காவல் அதிகாரியாக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அண்ணி உமா மகேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஷமிதா வில்லத்தனத்தில் அடுத்த பரிமாணத்தை காட்டி மிரட்ட வருகிறார். இவரின் தம்பியாக புதுமுக நடிகர் நியாஸ் கான் என்பவர் கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்தில் பத்ராவுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

பத்ரா என்ற நேர்மையான இளம் போலீஸ் அதிகாரி திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண். தனது கணவன் மீதான காதலுக்கிடையே, கடமையை ஆற்ற பாடுபடும் பத்ரா, உமா மகேஷ்வரியால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள்? தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறார்? என்பது தான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

 • மௌனிகா - பத்ரா
 • ஷமிதா - உமா மகேஷ்வரி
 • நியாஸ் கான் - கார்த்திகேயன்

உமா மகேஷ்வரி குடும்பத்தினர்[தொகு]

 • உதயா - விநாயகம்
 • சாந்தி வில்லியம்ஸ் - காந்தி மதி
 • சுவேதா - கஸ்தூரி
 • அசோக் பாண்டியன் -

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலைஞர் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 7:00 மணி தொடர்கள்
Previous program பூவே செம்பூவே
(5 ஆகத்து 2019 - ஒளிபரப்பில்)
Next program
- -