பூவுறையிதழ்


பூவுறையிதழ் (ஆங்கிலத்தலைப்பு) என்பது ஒரு பூவின் வெளிப்புற பாகங்களில் ஒன்றாகும். ஒரு பூவின் இதழ்களைப் புல்லி இதழ் அல்லது அல்லி இதழ் என எளிதாகப் பிரிக்க முடியாதபோது, இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பிளான்டுஃபோர்டியா (Blandfordia nobilis) போன்ற தாவரங்களில் பூவின் பாகங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாலோ அல்லது அல்லி மற்றும் புல்லி இதழ்கள் வெவ்வேறு அடுக்குகளாக இருந்தாலும் தோற்றத்தில் ஒன்றாக இருப்பதாலோ இவ்வாறு அழைக்கப்படுகிறது.[1][2]
தோற்றம்
[தொகு]பூக்கும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் பிரிக்கப்படாத இப்பூவுறையிதழ்களே, ஆரம்ப நிலை என்று கருதப்படுகிறது. உதாரணமாக, அம்போரெல்லா (Amborella) போன்ற தாவரங்கள் இத்தகைய இதழ்களைக் கொண்டுள்ளன. நவீன பூக்களில், வெளிப்புற அடுக்கு மொட்டுகளைப் பாதுகாக்கப் புல்லி இதழ்களாகவும், உட்புற அடுக்கு மகரந்தச் சேர்க்கையாளர்களை ஈர்க்க அல்லி இதழ்களாகவும் மாற்றம் பெற்றுள்ளன.[3] [4] [5]
வடிவங்கள்
[தொகு]இப்பூவுறையிதழ்களை விவரிக்க மென்மையான முடிகள் கொண்டவை (pubescent) அல்லது மிகச்சிறிய முடிகள் கொண்டவை (puberulent) போன்ற சொற்கள் தாவரவியலில் பயன்படுத்தப்படுகின்றன. பூவிதழின் வடிவமானது, இலைகளின் வடிவத்தை விவரிக்கும் முறையிலேயே குறிப்பிடப்படுகிறது. லில்லி மற்றும் துலிப் போன்ற ஒருவித்திலை தாவரங்களில் இவை மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stearn, William Thomas (2004). Botanical Latin. Timber Press. ISBN 978-0-7153-1643-6.
- ↑ Ronse De Craene, L. P. (2007). "Are Petals Sterile Stamens or Bracts? The Origin and Evolution of Petals in the Core Eudicots". Annals of Botany 100 (3): 621–630. doi:10.1093/aob/mcm076. https://academic.oup.com/aob/article/100/3/621/104191.
- ↑ Rost, Thomas L.; Weier, T. Elliot (1979). Botany: A Brief Introduction To Plant Biology (5th ed.). Wiley & Sons. ISBN 0-471-02114-8.
- ↑ Jones, Samuel (1979). Plant Systematics. McGraw-Hill. ISBN 0-07-032795-5.
- ↑ de Candolle, Augustin Pyramus (1841). Vegetable organography. Vol. 2. Translated by Boughton Kingdon. London: Houlston & Stoneman.