பூவாடைக்காரி வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூவாடைக்காரி அம்மன் வழிபாடு, பூ என்பதற்கு பூப்பு என்பது பொருள். பூப்பு என்பதற்கு பூப்படைதல், மாதவிடாய் என்பது பொருள். ஒவ்வொரு வீட்டிலும் பருவம் எய்திய ஆண், பெண்கள் கன்னிகழிவதற்குமுன் இறந்துவிட்டால் அவர்களை வழிபடுவது பூவாடைக்காரி வழிபாடு ஆகும்.

அமைவிடம்[தொகு]

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பூவாடைக்காரி வழிபாடு உள்ளது.

சிலையமைப்பு[தொகு]

இதற்கு உருவச்சிலை இல்லை. இறந்த ஆண் முன்னோருக்கு வெள்ளைத் துண்டும், பெண் முன்னோருக்கு சிவப்புத் துண்டு (அ) புடவையும் வைத்து வழிபடுவர், அவ்வாடைகளே முன்னோர்களாகக் கருதப்படுகிறது. மேலும் கரகம் சோடித்து அக்கரகத்தையே முன்னோர்களாகக் கருதுகின்றனர்.

கோயில் அமைப்பு[தொகு]

ஊரில் அவரவர் வீட்டிலுள்ள பூசை அரையே முன்னோர்களை வழிபடும் கோயிலாக அமைகிறது.

வழிபாடு[தொகு]

குளக்கரையில் (அ) கிணற்றங்கரையில் கரகம் சோடித்து அதை முன்னோராகக் கருதி அவர்களை அழைத்துவந்து பூசை அரையில் வைத்து வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் நாளில் இவ்வழிபாடு நடைபெறும்.

வழிபடுவோர்[தொகு]

வன்னியர், பறையர், ரெட்டியார், சைவப் பிள்ளை மற்றும் செட்டியார் போன்ற குலத்தினர் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.,

உசாத்துணைகள்[தொகு]

  • பெண்ணிய நோக்கில் செஞ்சி நாட்டுப்புற அம்மன் தெய்வங்கள், ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2008.
  • துளசி. இராமசாமி, நெல்லை மாவட்ட நாட்டுப்புறத்தெய்வங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1985