பூவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆற்றங்கரைகள், நீரோடைகள் என்பனவற்றுக்கு அருகில் குழியை ஏற்படுத்தி தெளிந்த நீரைப் பெறும் சிறு குழியே பூவல் என அழைக்கப்படுகின்றது.

நீரின் ஓட்டம், கூடுதலாக மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாவனையால் குறித்த ஆறு, ஓடை நீர் கலங்கல் தன்மை, சேர், சகதி, உக்கல், அடையல்களுடன் காணப்படும். அவ்வாறான நேரத்தில் தெளிந்த நீரை இவற்றில் இருந்து பெற முடியாமல் இருக்கும். எனவே இப்புகுதிகளில் ஒரு இயற்கையான மற்றும் எளிமையான வடிகட்டல் முறைமூலம் தெளிந்த நீரைப் பெறும் முறையே பூவல் என அழைக்கப்படுகின்றது.

மணற்பாங்காக இருக்கும் ஆற்றங்கரைகளில் நீரோடும் கரையில் இருந்து சில அடிகள் இடைவெளியில் கையினால் அல்லது சிறிய தடிகள் கொண்டு நிலத்தை அகழ நீர் ஊறும்.  இதை தேவைக்கு ஏற்ப ஆழ அகலப்படுத்திக் கொள்ளலாம்; நீர் தொடர்ச்சியாக ஊறுவதனாலும் குறித்த மண் இறுக்கமற்ற மணல் மண்ணாக இருப்பதனாலும் விரைவில் தூர்ந்து மண்ணால் நிறைந்துவிடும்.

எனவே அகலும் பூவல் குறித்த நாட்களேனும் பாவனையில் இருக்க ஆற்றங்கரைகளில் காணப்படும் சிறு கற்களை அடுக்கி விரைவில் இடிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகின்றது.  

குறிப்பாக இலங்கையில் கதிர்காம பாதயாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்தவகையான பூவல்களை அமைத்தே தமக்குத் தேவையான குடிநீர் மற்றும் சமயல் தேவைகளுக்கும் நீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவல்&oldid=2822079" இலிருந்து மீள்விக்கப்பட்டது