உள்ளடக்கத்துக்குச் செல்

பூவரசு (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவரசு சஞ்சிகை 1991 இல், ஐரோப்பிய மண்ணில் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத கால கட்டத்தில் ஜேர்மனியின், பிறேமனில் இரு மாதத்துக்கு ஒரு சஞ்சிகையாக முகிழ்ந்தது. இதன் ஆசிரியர் இந்து மகேஷ்.

புலம்பெயர் மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களைக் கொண்ட இந்தப் பூவரசு சஞ்சிகைக்கு இருக்கிறது.சஞ்சிகையின் செயற்பாடுகளாக ஒவ்வோர் ஆண்டும் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஆண்டு நிறைவை ஒட்டிய விழா கொண்டப்பட்டு அந்த விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன.

2006க்குப் பிற்பட்ட காலங்களில் இணைய வளர்ச்சியின் மேலோங்கலில் பூவரசின் வருகையில் தள்ளாட்டம் ஏற்பட்டது. 2006 வரை இருமாதத்துக்கு ஒன்றாக வெளிவந்த சஞ்சிகை தற்சமயம் ஆண்டுக்கு இரண்டாக வெளிவருகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]

பூவரசு, சில இதழ்கள் நூலகம் திட்டத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசு_(சஞ்சிகை)&oldid=2513571" இலிருந்து மீள்விக்கப்பட்டது