பூலுவநாட்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு நாட்டில் இடைக்காலத்தில் வாழ்ந்த பூலுவர்கள் தங்களுக்கென நாட்டுச்சபையை வைத்திருந்தனர். கோவை மாவட்டத்தில் பரவியிருந்த வடபரிசார நாடு என்ற பிரிவில் இருந்த ஒவ்வொரு ஊரிலும் பூலுவர் ஊர்ச்சபை இருந்தது.இதற்கு பூலுவனூர் என்று பெயர்.ஓர் ஊரின் வரியைப்பற்றி முடிவெடுக்க வடபரிசார பூலுவ நாட்டார் பேசி முடிவெடுக்கின்றனர்.பூலுவர்கள் கோவை மாவட்டத்தின் மேற்கு,தெற்கு,வடக்குப்பகுதிகளில் வாழ்ந்துள்ளனர்.நாயக்கர் காலத்தில் புரவிபாளையத்தில் வாழ்ந்த பட்டகாரர் பூலுவர் குடியைச்சேர்ந்தவர்.அவிநாசி, திருமுருகன்பூண்டி,அன்னூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில் கல்வெட்டுகளில் பூலுவவேட்டுவர் என்ற மரபினர் குறிக்கப்படுகின்றனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர்.ரா.பூங்குன்றன். (2005). கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை.. பக். 55. 
  2. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் -தொகுதி 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலுவநாட்டார்&oldid=3722952" இருந்து மீள்விக்கப்பட்டது