பூலியா
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| இந்தியா | |
| மொழி(கள்) | |
| ஒடியா | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| தந்தி-தந்த்வா |
பூலியா (Bhulia) என்பது இந்தியாவின் மேற்கு ஒடிசாவைத் தாயகமாகக் கொண்ட இந்திய இந்துசமய சாதியாகும். இந்த சாதி அமைப்பு தற்போது ஒடிசா முழுவதும் காணப்படுகிறது.
நெசவாளர் சாதி அமைப்பில் பூலியாக்கள் உயர் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உட்பிரிவுகள் இல்லை. இவர்கள் துணிகளில் போடப்பட்ட வார்ப்பு அச்சு மற்றும் சாயம் போன்றவற்றால் முதன்மை பெற்றவர்களாக அறியப்பட்ட ஒரு நெசவாளர் சாதியினர் ஆவர். இவர்கள் சாயத் தொழிலில் சிறப்பு பெற்றதால் சம்பல்புரி என்று அழைக்கப்படுகிறது.[1]
பூலியா சாதியினர் அனைவரும் மெகர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துகின்றனர். எனவே சில சமயங்களில் பூலியா தாந்தி என்றும் இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். தாந்தி என்பது அனைத்து நெசவாளர் சாதிகளுக்கும் பொதுவான ஒரு சொல் ஆகும்.[1][2][3]
துணி
[தொகு]கப்டா எனப்படும் துணி, "தான்" என்றும் அழைக்கப்படுகிறது. இத்துணி பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்ட பருத்தி வகை துணி ஆகும். பூலியா நெசவாளர்கள் நெசவில் இந்தத் துணியை நெய்து வந்தனர். இத்துணி முதன்மையாக இரவிக்கைகள் போன்ற பெண்களின் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கைத்தறி நெசவால் நெய்யப்பட்ட உள்ளூர் துணியாகும்.[2][4][5]
கன்னட மொழியில் "கப்டா என்பது ஒரு துணி வகையாகும்".[6]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Ghosh, G. K.; Ghosh, Shukla (1995). Indian Textiles: Past and Present. APH Publishing. p. 150. ISBN 9788170247067.
- 1 2 Geographical Review of India (in ஆங்கிலம்). Geographical Society of India. 1953. p. 28.
- ↑ Man in India (in ஆங்கிலம்). A. K. Bose. 1953. p. 285.
- ↑ "The Bhulias weave Kapata ( female cloths ) of varying sizes as follows :1 . À Kapata of 24 yards long and yards ... 4 r , 39 5 . , „ „ 5 , „ 42 or 43 inches wide The women of this area do not generally use cloth of 5 yard length . But those of Brahmin ..." Page 282, 285, 286 https://www.google.co.in/books/edition/Man_in_India/Oo1RAQAAIAAJ?hl=en&gbpv=1&bsq=Kapata+cloth&dq=Kapata+cloth&printsec=frontcover
- ↑ Fairchild's dictionary of textiles. New York: Fairchild Publications. 1959. p. 297.
- ↑ Kittel, Rev F. (1894-01-01). Kannada-English Dictionary. Rev. Kittel (in கன்னடம்). RG Kannada e-Publisher. p. 362.