பூலா சவுத்ரி
பூலா சவுத்ரி, (Bula Choudhury) (பிறப்பு 2 சனவரி 1970, ஹுக்ளி,இந்தியா) அர்சுனா மற்றும் பத்ம சிறீ விருது பெற்ற முன்னாள் பெண்கள் நீச்சல் வெற்றியாளர் ஆவார்` இவர், 2006 முதல் 2011 வரை இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏவாக இருந்தார்.[1]
நீச்சல்[தொகு]
இவர், தனது ஒன்பதாவது வயதில், தேசிய அளவிளான போட்டியில் கலந்து கொண்டார். தனது வயது ஒத்தோர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி, 6 போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களைப் பெற்றார். பல்வேறு இளையோர் பிரிவு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்றார். 1991ல் தெற்காசிய விளையாட்டுக் கூட்டமைப்புப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றார்.
1989ல் தொலை தூர நீச்சல் செய்ய ஆரம்பித்தார். மேலும் அவ்வாண்டில் ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்தார். 1996ல் 81கிமீ முர்சிதாபாத் தொலை தூர நீச்சல் போட்டியினை வென்றார். 1999ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தார். 2005ல் ஐந்து கண்டங்களின் சமுத்திர கால்வாய்களை கடந்த முதல் பெண் ஆவார். ஜிப்பிரால்டர் நீரிணை, டைர்ஹனியன் கடல், கூக் நீரிணை, கிரேக்க்த்தில் உள்ள டோரொனியொஸ் வளைகுடா, கலிபோர்னியா கடற்கரையையொட்டிய கட்டலினா கால்வாய் மற்றும் தென் ஆப்பிரிக்கா, ரோபன் தீவுக்கு செல்லக்கூடிய மூன்று நங்கூர விரிகூடா இதில் அடங்கும். கொல்கத்தாவில் நீச்சல் சங்கத்தினை ஆரம்பிக்க உள்ளார்.
விருதுகள் மற்றும் தனித்தன்மை[தொகு]
- எழு கடல்கலை நீந்திக் கடந்த முதல் பெண்
- 1989 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் ஆங்கில கால்வாயை இரு முறை நீந்திக் கடந்தார்.
- 1990ல் அர்சுனா விருதினைப் பெற்றார்..
- பத்ம சிறீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. November 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது.