பூர்வக் கிரியை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூர்வக் கிரியை சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் ஒரு பிரிவாகிய ஆன்மார்த்தக் கிரியையின் வகைகளில் ஒன்றாகும். இது ஓர் உயிர் தாயின் கற்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும். பூர்வக் கிரியைகளில் பிரதானமாக இருது சங்கமனம், கர்ணவேதனம், நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், உபநயனம், விவாகம், தீட்சை, சந்தியாவந்தனம், ஆசாரியாபிஷேகம், சிவபூசை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்வக்_கிரியை&oldid=1119695" இருந்து மீள்விக்கப்பட்டது