பூர்ணிமா ராணி சில் வன்கலவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூர்ணிமா ராணி சில் வன்கலவி (Rape of Purnima Rani Shil) என்பது அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது, அப்போது குழந்தையாக இருந்த பூர்ணிமா ராணி சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றியதாகும்.[1][2]

பின்னணி[தொகு]

2001 ஆம் ஆண்டில்,வங்காளதேச தேசியவாதக் கட்சி மற்றும் வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி அவாமி லீக்கிற்கு பதிலாக பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த மாற்றம் 2001வங்காளதேச தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு வழிவகுத்தது, இதன் போது அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் உறுப்பினர்கள் வங்காளதேச தேசியவாத கட்சி மற்றும் வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆர்வலர்களால் தாக்கப்பட்டனர். பூர்ணிமா அவாமி லீக்கின் வாக்குச்சாவடி முகவராக இருந்ததால்,வங்காளதேச தேசியவாதக் கட்சியினர் தேர்தலின் போது வாக்குப் பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[3]

வரலாறு[தொகு]

சில் 12 வயது சிறுமி, சிராஜ்கஞ்ச் மாவட்டம் உல்லாபாரா உபாசிலாவில் உள்ள பெர்பா டெலுவாவில் 8 அக்டோபர் 2001 அன்று அவரது வீட்டை 30-40 பேர் தாக்கினர்.[4] அவர் குழு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்.வங்காளதேச தேசியவாத கட்சி மற்றும் வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் ஆனால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. அந்தத் தாக்குதலின் போது அவளுடைய சகோதரி கண்பார்வையை இழந்தார் , அவளது குடும்ப வியாபாரமான சலூன் இரண்டு முறை கொள்ளையடிக்கப்பட்டது. அவளுடைய குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தீவிர இஸ்லாமியர்கள் மற்றும் வங்காளதேச ஜமாத்-இ- இஸ்லாமியால் வங்களாதேசிலிருந்து விரட்ட இந்து கிராமங்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக இந்தச் சம்பவம் இருந்தது.[4][5] வஹீதுல் ஹக் மற்றும் ஷாஹாரியார் கபீர் ஆகியோரின் முயற்சியால் அவர் டாக்காவிற்கு சென்றார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.[3]

அவாமி லீக் ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை தொடங்கியது.[6] 4 மே 2011 அன்று, சில் பாலியல் வன்கலவியில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. [7] மேலும் அவர்களுக்கு தலா 100 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளில் 6 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் தப்பி ஓடியுள்ளனர்.[4][8] சில் இந்த தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை, ஏனெனில் தனது கிராமத்தைச் சேர்ந்த குறைந்தது இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.[1]

சில் தனது கல்விக்காக அவாமி லீக் தலைவரான பிரதமர் ஷேக் அசீனாவிடம் இருந்து நிதி உதவி பெற்றார். அவர் கல்வியை முடித்த பிறகு டாக்காவில் ஒரு இசை ஆசிரியராக வேலை செய்தார்.[7] அதற்கு முன்பு அவர் ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் சிறிது காலம் வேலை செய்தார் , ஆனால் முகநூலில் பரவலான தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டார் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலான துன்புறுத்தல்களை எதிர்கொண்டார்.[9]

2018 ஆம் ஆண்டில், சில், மாநில தகவல் அமைச்சரான தரனா அலீமின் தனிப்பட்ட அதிகாரியானார். 16 ஜனவரி 2019 அன்று, அவாமி லீக்கில் இருந்து மகளிருக்கான நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.[7] அவர் அவாமி லீக்கின் விவசாய மற்றும் கூட்டுறவு துணைக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.[10]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "'লজ্জা আমি পাব কেন, লজ্জা তো সমাজের-রাষ্ট্রের'". SAMAKAL (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  2. "Eleven sentenced to life for Bangladesh gang rape". https://www.bbc.com/news/world-south-asia-13277465. 
  3. 3.0 3.1 Express, The Financial. "Purnima proves a few points for her and her kind". The Financial Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  4. 4.0 4.1 4.2 "11 jailed for life for rape of Sirajganj schoolgirl". The Daily Star (in ஆங்கிலம்). 2011-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  5. "Rape and torture empties Bangladeshi villages". the Guardian (in ஆங்கிலம்). 2003-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  6. "বিএনপি জামায়াতের আমলনামা-পূর্ণিমা রানীর কথা মনে কি পড়ে বাংলাদেশ!". Manikganj Barta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  7. 7.0 7.1 7.2 "Purnima Shil, the 2001 post-election gang-rape victim, buys AL nomination form". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  8. "| কালের কণ্ঠ". Kalerkantho (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  9. "Shamed again in the age of Facebook" (in en-GB). BBC News. 2016-10-29. https://www.bbc.com/news/magazine-37720930. 
  10. "Purnima Shil hopes for MP seat". Dhaka Tribune. 2019-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.