பூர்ணிமா தேவி பர்மன்
பூர்ணிமா தேவி பர்மன் | |
---|---|
![]() நாரி சக்தி விருது மார்ச்சு 8, 2018-ல் பெற்றபோது | |
பிறப்பு | பப் மிஜ்ர் கோன், காமரூபம், அசாம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | குவகாத்தி பல்கலைக்கழகம் |
அமைப்பு(கள்) | ஆரணயக் |
அறியப்படுவது | பெருநாரைப் பாதுகாப்பு, கர்கிலா படை நிறுவனர் |
பூர்ணிமா தேவி பர்மன் (Purnima Devi Barman) இந்தியாவின் அசாம் மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு வனவிலங்கு உயிரியலாளர் ஆவார். உள்ளூரில் கர்கிலா என்று அழைக்கப்படும் பெருநாரை (லெப்டோப்டிலோசு துபியசு) பாதுகாப்புப் பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் முழுக்க முழுக்க பெண்களுக்கான பாதுகாப்பு முயற்சியான கர்கிலா படை நிறுவனர் ஆவார். 2017-ஆம் ஆண்டில், பர்மன் தனது பாதுகாப்பு முயற்சிகளுக்காக வைட்லி விருதையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் பெண்களுக்கான மிக உயர்ந்த குடிமகள் விருதான நாரி சக்தி விருதையும் பெற்றார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]பூர்ணிமா தேவி பர்மன் அசாமில் உள்ள குவகாத்தி பல்கலைக்கழகத்தில்[1] பயின்றார். இங்கு இவர் சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலில் நிபுணத்துவம் பெற்ற விலங்கியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[2] 2007-ஆம் ஆண்டு இவர் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால் கிராமப்புற அசாமில் உள்ள கிராமங்களில் சமூகப் பாதுகாப்பு கல்வியில் கவனம் செலுத்துவதற்காகத் தனது ஆய்வினை 2019 வரை தாமதப்படுத்தினார்.[3] பல்லுயிர் பாதுகாப்புக்கான அரசு சாரா அமைப்பான ஆரண்யக்கில் உள்ள பறவைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பிரிவில் மூத்த வனவிலங்கு உயிரியலாளராக பர்மன் பணியாற்றியுள்ளார். இங்கு இவர் ஆரண்யக்கின் பெருநாரை பாதுகாப்புத் திட்டத்தை ஒருங்கிணைத்தார். பர்மன் பெண்கள் இயற்கை வலையமைப்பு இந்தியாவின் இயக்குநராகவும்,[4] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[5]
பெருநாரை
[தொகு]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கப் பட்டியலில் அழிந்து வரும் நாரையாகப் பட்டியலிடப்பட்டுள்ள பெருநாரையில் செய்த ஆய்வு, பாதுகாப்புப் பணிக்காக பர்மன் அறியப்படுகிறார்.[6] இது உலகளவில் 800–1,200 முதிர்ந்த தனிநபர்களைக் கொண்டுள்ளது. இந்த தனிநபர்களில் பெரும்பாலோர் (650–800) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காணப்படுகின்றனர்.[6] அசாமில் இந்தப் பறவை நகர்ப்புறங்களுடன் நெருங்கிய தொடர்பில் வாழ்கிறது. தனியாருக்குச் சொந்தமான மரங்களில் கூடு கட்டுகிறது. குப்பைக் கிடங்குகளில் குப்பைகளைச் சேகரிக்கிறது.[2][6] இதன் விளைவாக, இப்பறவைகள் மாசுபாடு, வாழ்விட இழப்பு கூடு கட்டும் மரங்களை வெட்டுதல் ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகிறது.[6]
அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள தாதாரா, பச்சாரியா மற்றும் சிங்கிமாரி ஆகிய தொலைதூரக் கிராமங்களில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியைப் பெருநாரைகளில் மேற்கொண்டார்.[3] 2007-ஆம் ஆண்டில், மர உரிமையாளர் குஞ்சுகளுடன் கூடிய ஒரு பெருநாரை கூட்டைக் கொண்ட ஒரு மரத்தை வெட்டுவதைக் கண்டார்.[3] இந்தப் பறவையின் அழகற்ற தோற்றம், குப்பைகளை அள்ளும் தன்மை மற்றும் துர்நாற்றம் வீசும் கூடுகளால் கிராமவாசிகளிடையே இப்பறவைக்குக் கெட்ட பெயர் பெற்றிருப்பதால் மரத்தினை வெட்டுவதாக பர்மன் கண்டுபிடித்தார்.[3][7] இதனைத் தடுக்கவும் பெருநாரையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்தும் இப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்தார். இதனால் இவரது ஆய்வினைக் குறித்த காலத்தில் முடிக்க இயலவில்லை.[3][8][9]
உள்ளூர் கிராமவாசிகளின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஒருங்கிணைக்கும் பல பாதுகாப்பு பிரச்சாரங்களை பர்மன் வழிநடத்தினார். மத விழாக்கள், சமையல் போட்டிகள், தெரு நாடகங்கள் மற்றும் சமூக நடனங்களின் போது பாதுகாப்பு செய்திகளை வழங்குவதும் இதில் அடங்கும்.[3][10] பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்பத் திரைப்படப் பிரபலங்களை ஈடுபடுத்துதல்,[2] பெருநாரையால் பயன்படுத்தப்படும் கூடு கட்டும் மரங்களின் உரிமையாளர்களைக் கொண்டாடுதல் ஆகிய பிற கல்வி நுட்பங்களில் அடங்கும்.[2][11] குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு கல்வி பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. விளையாட்டுகள், செயல்பாடுகளைப் பயன்படுத்தி பெருநாரையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன.[3][2][11][10] கூடு கட்டும் மர உரிமையாளர்களின் குழந்தைகளுக்காக ஓர் உதவித்தொகையும் உருவாக்கப்பட்டது.[10] அரசு அதிகாரிகளைப் பெருநாரை வாழ்விடங்களைப் பார்வையிட அழைப்பதன் மூலமும்[3][2] உள்ளூர் வனத்துறை மற்றும் காவல் துறைகளைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்க வைப்பதன் மூலமும் கம்ரூப் மாவட்ட அரசாங்கத்திடமிருந்து பர்மன் ஆதரவைப் பெற்றார்.[2][10]
கர்கில்லா படை
[தொகு]பர்மன், கர்கில்லா படையின் நிறுவனர் ஆவார். இது பெருநாரையின் உள்ளூர் பெயரால் பெயரிடப்பட்ட அனைத்துப் பெண் அடிமட்டப் பாதுகாப்புக் குழுவாகும்.[3][7][12][13][9] இந்தப் பெயர் "எலும்பு விழுங்குபவன்" என்பதற்கான சமசுகிருத வார்த்தையிலிருந்து வந்தது.[14] இந்தக் குழுவில் 400 உள்ளூர் அசாமியத் தன்னார்வலர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் உள்ளனர்.[15] பெருநாரையின் பாதுகாப்பைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றுவதே இவர்களின் குறிக்கோள் ஆகும்.[13] இந்த இயக்கம் விளிம்புநிலை பெண்களுக்கு அதிகாரம் அளித்து, உள்ளூர் பாதுகாப்பு பிரச்சினைகளில் அவர்களுக்குக் குரல் கொடுத்த பெருமையைப் பெற்றுள்ளது.[12][4]
பர்மனும் கர்கிலா படையும் காயமடைந்த பெருநாரைக் குஞ்சுகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.[8] காற்று வீசும் நாட்களில் (குறிப்பாக மழைக்காலங்களில்) மரங்களிலிருந்து குஞ்சுகள் விழுந்தால் அவற்றைப் பிடிக்கக் கிராமவாசிகள் கூடு கட்டும் மரங்களைச் சுற்றி வலைகளை வைக்கின்றனர். மேலும் காயமடைந்த குஞ்சுகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு, உள்ளூர் மிருகக்காட்சிசாலையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகிறது.[3][8] பர்மன் பெருநாரைக்காகச் செயற்கை இனப்பெருக்கத் தளத்தையும் உருவாக்கியுள்ளார். இது 2019-ஆம் ஆண்டில் குஞ்சுகள் பொரிக்க வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.[3]
பர்மனின் பாதுகாப்பு முயற்சிகள் தொடங்கியதிலிருந்து, உள்ளூர் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2007-ஆம் ஆண்டு பாதுகாப்பு முயற்சிகள் தொடங்கியபோது, கம்ரூப் மாவட்ட கூட்டமைப்பில் 28 கூடுகள் மட்டுமே காணப்பட்டன. ஆனால் 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி 200 கூடுகள் இருந்தன.[3] இது இந்த பெரிய துணை கூட்டமைப்பினை உலகிலேயே மிகப்பெரியதாக மாற்றியது.[8][16]
கிராமப்புற அசாமியக் கிராமங்களின் கலாச்சாரத்தில் பெருநாரைப் பாதுகாப்பை அதிக அளவில் ஒருங்கிணைத்த பெருமையும் பர்மனுக்கு உண்டு.[15] பர்மனின் பாதுகாப்பு முயற்சிகளைத் தொடர்ந்து, கம்ரூப் மாவட்ட கிராமவாசிகள் பெருநாரைப் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் 2010 வரை, கூடு கட்டும் மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை.[17] பறவைகளின் பிம்பத்தைக் கெட்ட சகுனங்கள் அல்லது தீங்குயிரி என்பதிலிருந்து மாற்றி திருமணம் மற்றும் பிரசவம் போன்ற புகழ்பெற்ற மனித மரபுகளில் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதியான ஒன்றாக மாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றிபெற்றன.[14] உள்ளூர் நாட்டுப்புறப் பாடல்கள், மரபுகள் மற்றும் கலாச்சார விழாக்களில் பெருநாரை குறித்துப் பாடல்கள் இசை இணைக்கப்பட்டன.[3][9]உதாரணமாக, கிராமவாசிகள், அசாமியப் பெண்களுக்குச் செய்யப்படும் அதே சடங்குகளைப் பயன்படுத்தி, பெருநாரைக்கு வளைகாப்பு அல்லது பஞ்சாமிருத விழாவைக் கொண்டாடுகின்றனர்.[10] மேலும் பெருநாரை தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 அன்று கொண்டாடப்படுகிறது.[11] கர்கிலா படையினைச் சேர்ந்த பெண்கள், தங்கள் துணிகளில் பெருநாரையின் உருவங்களை நெய்து, தங்கள் குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டுவதோடு, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் பரப்புகிறார்கள்.[13] மற்றொரு சமூகப் பாதுகாப்பு முயற்சியாக, பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கலந்துரையாடல்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கல்வி கற்பிப்பதையும், தோட்டி பறவைகள் அடிக்கடி காணப்படும் குப்பைக் கிடங்குகளுக்குக் களப்பயணங்களை மேற்கொள்வதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.[14] பூர்ணிமா தேவி பர்மனும் அவரது குழுவினரும் பெருநாரை பாதுகாப்பு முயற்சிகள் குறித்த செய்திக்காகப் பத்திரிகையாளர் அப்துல் கனி லாட்லி ஊடக & விளம்பர விருதை (2015–16) வென்றார்.[18][19]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதினை (இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த குடிமகன் விருது) பெற்றவர் பர்மன்.[20] மேலும் 2017-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி ராயல் அன்னே இவருக்கு வைட்லி விருதை (கிரீன் ஆசுகார் என்றும் அழைக்கப்படுகிறது) வழங்கினார்.[21] கூடுதலாக, பர்மன் பாதுகாப்பு தலைமைத்துவத் திட்டத்தின் 2015 தலைமைத்துவ விருதையும்,[22][23] எதிர்கால பாதுகாவலர் விருது 2009,[24] ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து 2016 இந்தியா பல்லுயிர் விருது,[24] ராயல் பேங்க் ஆப் இசுக்காட்லாந்து ஆர்.பி.எசு. "புவி கதாநாயகன்" (2016),[24] 2017-இல் பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் பாரத் சஞ்சார் சிறந்த சேவைக்கான விருது -2017,[24] 2016-இல் பாலிபாரா அறக்கட்டளை "கிரீன் குரு விருது",[24]2017-இல் வடகிழக்கிலிருந்து எப். ஐ. ஐ. சி. ஐ. எப். எல். ஓ. பெண்கள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.[24] தொழில்முனைவோர் பார்வை பிரிவில் ஐ. நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான பூமியின் வெற்றியாளர்கள் விருதை பார்மன் பெற்றுள்ளார். 2024-ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள அடிமட்டப் பாதுகாப்புத் தலைவர்களை ஆதரிக்கும் வைட்லி இயற்கைப் பாதுகாப்பு நிதியத்திலிருந்து 1,00,000 விட்லி தங்க விருதை வென்றார்.[25][26] பர்மன் 2025ஆம் ஆண்டிற்கான டைம் இதழின் சிறந்த பெண்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[27]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ GU fraternity felicitates two conservationists. The Assam Tribune. 2017 Jul 1 [accessed 2019 Nov 6]. http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=jul0117/city058 பரணிடப்பட்டது 12 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Barman PD, Das AK, Das BK, Biswas S. Conservation initiatives for Greater Adjutant Stork in Assam, India. Aaranyak; 2011. Report No.: Final Report CLP project ID: 331509.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 Wangchuk, Rinchen Norbu (2019-08-01). "How One Woman With a Special Plan Saved Assam's 'Hargila' Storks From Extinction". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-02-13.
- ↑ 4.0 4.1 "Recent News". Women In Nature Network (in ஆங்கிலம்). Retrieved 2024-02-13.
- ↑ "Meet our members - Stork, Ibis and Spoonbill Specialist Group" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2016-06-29. Retrieved 2024-02-13.
- ↑ 6.0 6.1 6.2 6.3 BirdLife International. Leptoptilos dubius. IUCN Red List of Threatened Species 2016. 2016 [accessed 2019 Nov 3]. https://www.iucnredlist.org/species/22697721/93633471 பரணிடப்பட்டது 12 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம். doi:http://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697721A93633471.en
- ↑ 7.0 7.1 Purnima Barman, India - Whitley Awards 2017 (in ஆங்கிலம்), 19 May 2017, retrieved 2024-02-13
- ↑ 8.0 8.1 8.2 8.3 Barman PD, Ali S, Deori P, Sharma DK. Rescue, Treatment and Release of an Endangered Greater Adjutant Leptoptilos dubius. Zoo’s print. 2015;30(9):6–9.
- ↑ 9.0 9.1 9.2 Perinchery, Aathira (2017-12-30). "Purnima Barman works with communities to protect a scruffy, endangered stork in Assam" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/purnima-barman-works-with-communities-to-protect-a-scruffy-endangered-stork-in-assam/article22325079.ece.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 Barman PD, Borthakur M, Das AK, Da J. Greater Adjutant Conservation Through Community Participation in Assam, India. Aaranyak; 2014. p. 76pp. Report No.: CLP Project ID F03110012. Final Project Report.
- ↑ 11.0 11.1 11.2 "Welcome to official Website of Aaranyak | Home". aaranyak.org. Archived from the original on 12 January 2021. Retrieved 8 January 2021.
- ↑ 12.0 12.1 "Assam Conservationist Purnima Barman Has Won The 'Green Oscars'". HuffPost (in ஆங்கிலம்). 2017-05-18. Retrieved 2024-02-13.
- ↑ 13.0 13.1 13.2 "Village forms ' hargila army'". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-02-13.
- ↑ 14.0 14.1 14.2 Rhodes, Carla (2021-03-29). "A Biologist, an Outlandish Stork and the Army of Women Trying to Save It" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2021/03/29/travel/india-greater-adjutant-stork.html.
- ↑ 15.0 15.1 "Meet the Indian Scientist Who Gave the Greater Adjutant Stork an Image Makeover". All About Birds (in அமெரிக்க ஆங்கிலம்). 22 June 2020. Archived from the original on 12 January 2021. Retrieved 8 January 2021.
- ↑ Barman PD, Sharma DK. Largest breeding colony of Greater Adjutant, Leptoptilos dubius Gmelin, in Dadara-Pasariya-Singimari Villages in Assam, India. Zoo’s print. 2015;30(11):5–6.
- ↑ "The Greater Adjutant's All-Woman Army | RoundGlass | Sustain". RoundGlass | Sustain. 29 July 2019. Archived from the original on 12 January 2021. Retrieved 20 October 2020.
- ↑ "When all becomes one". nezine.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-10.
- ↑ "Abdul Gani of Guwahati bags Laadli media award". The Milli Gazette — Indian Muslims Leading News Source (in ஆங்கிலம்). Retrieved 2024-09-10.
- ↑ "Assam's Purnima Devi Barman achieves Nari Shakti Puraskar from President". www.guwahatiplus.com (in ஆங்கிலம்). Retrieved 2024-02-13.
- ↑ "Green Oscar for Assam conservationist". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-02-13.
- ↑ Knight T. Endangered giant stork protected by all-female army. Fauna and Flora International. 2018 Apr 18 [accessed 2019 Nov 3]. https://www.fauna-flora.org/news/national-recognition-indian-conservationist-mobilised-female-army பரணிடப்பட்டது 12 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Conservation initiatives for greater adjutant stork in Assam, India". Conservation Leadership Programme (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-02-13.
- ↑ 24.0 24.1 24.2 24.3 24.4 24.5 "European Environment Foundation". Archived from the original on 12 January 2021. Retrieved 24 February 2020.
- ↑ "Assam's Purnima Devi Barman Receives 'Green Oscar' Whitley Gold Award 2024". NDTV. NDTV. 2024-05-02. https://www.ndtv.com/india-news/assams-purnima-devi-barman-receives-green-oscar-whitley-gold-award-2024-5573962. பார்த்த நாள்: 26 May 2024.
- ↑ "Assam's Wildlife Conservationist, Dr. Purnima Devi Barman Conferred Whitley Gold Award For 2024". AIR India. Aakashbani_Prasar Bharati. May 2, 2024. https://www.newsonair.gov.in/assams-wildlife-conservationist-dr-purnima-devi-barman-conferred-whitley-gold-award-for-2024/. பார்த்த நாள்: 26 May 2024.
- ↑ mwalsh@cleveland.com, Molly Walsh (20 February 2025). "Time Magazine unveils 2025 Women of the Year. See who made the list". cleveland.