பூர்ணிதா
தோற்றம்
பூர்ணிதா | |
|---|---|
| பிறப்பு | கல்யாணி 23 நவம்பர் 1990 |
| மற்ற பெயர்கள் | பூர்ணிதா |
| பணி | நடிகை |
பூர்ணிதா என்கின்ற கல்யாணி (பிறப்பு: 23 நவம்பர், 1990) ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், அள்ளித்தந்த வானம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.
பெயர் மாற்றம்
[தொகு]இவர் தன்னுடைய பெயரை "பூர்ணிதா" என்று மாற்றிக்கொண்டு மறந்தேன் மெய்மறந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 திரைப்படத்திலும், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்த பிறகு தன்னுடைய உண்மையான பெயரான "கல்யாணி" என்று மாற்றிக்கொண்டார். இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
திரைப்படத்துறை
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2001 | அள்ளித்தந்த வானம் | ஜூலி | தமிழ் | குழந்தை நட்சத்திரம் |
| 2002 | ஸ்ரீ | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
| 2003 | ரமணா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
| ஜெயம் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | ||
| முல்லாவழியும் தென்மாவும் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் | ||
| 2006 | மறந்தேன் மெய்மறந்தேன் | பூர்ணிதா | தமிழ் | கதாநாயகியாக அறிமுகம் |
| பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 | கல்யாணி | தமிழ் | ||
| 2007 | மஞ்சு குறிசே வெல்லலோ | தெலுங்கு | ||
| 2008 | இன்பா | தமிழ் | ||
| கத்திக்கப்பல் | மல்லிகா | தமிழ் | ||
| எஸ் எம் எஸ் | மலையாளம் | |||
| பருந்து | மலையாளம் | |||
| 2009 | மல்லி மல்லி | மது சத்யநாராயணா | தெலுங்கு | |
| இளம்புயல் | தென்றல் போஸ் | தமிழ் |