பூர்ணா வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 20°55′N 73°42′E / 20.91°N 73.7°E / 20.91; 73.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்
வனவிலங்கு சரணாலயம்
முகாம் பகுதியிலிருந்து பூர்ணா ஆறு பூர்ணா ஆற்றிலிருந்து இக்காப்பத்தின் பெயர் நிறுவப்பட்டது
முகாம் பகுதியிலிருந்து பூர்ணா ஆறு
பூர்ணா ஆற்றிலிருந்து இக்காப்பத்தின் பெயர் நிறுவப்பட்டது
பூர்ணா வனவிலங்கு சரணாலயம் is located in குசராத்து
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்
இந்தியா, குஜராத்தில் அமைவிடம்
பூர்ணா வனவிலங்கு சரணாலயம் is located in இந்தியா
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்
பூர்ணா வனவிலங்கு சரணாலயம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°55′N 73°42′E / 20.91°N 73.7°E / 20.91; 73.7
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்டாங் மாவட்டம்
பூர்ணா வனவிலங்கு சரணாலயம்ஜூலை 1990
பரப்பளவு
 • மொத்தம்160.84 km2 (62.10 sq mi)
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ
அருகிலுள்ள நகரம்வியாரா
நிர்வாக அமைப்புஇந்திய அரசு, குசராத்து அரசாங்கம்

பூர்ணா வனவிலங்கு சரணாலயம் (Purna Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், குஜராத் மற்றும் மகாராட்டிரம் மாநில வனப்பகுதியில் உள்ள வனவிலங்கு சரணாலயமாகும். தெற்கு குஜராத்தில், இது வியாரா, டாபி மாவட்டம் மற்றும் ஆக்வா, டாங் மாவட்டத்திலும் மகாராட்டிரத்தில் நந்தூர்பார் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. டாங்சு மாவட்டத்தைத் தவிர, இது டாங்சு வனத்தின் வடக்கு பிரிவின் ஒரு பகுதியாகும். [1][2]

இது ஜூலை 1990இல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. [3] இதன் வழியாகப் பாயும் பூர்ணா நதியிலிருந்து இச்சரணாலயத்தின் பெயர் வந்தது.

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

இந்த சரணாலயத்தில் தேக்கு மற்றும் மூங்கில் அடர் காடுகள் உள்ளன. மிதமான முதல் கன மழையுடன் கூடிய வெப்பமண்டல காலநிலை நிலவும் இந்த பிராந்தியத்தின் சராசரி மழையளவு சுமார் 2500 மி.மீ. [3]

மூன்று தனித்துவமான காலநிலை பருவங்கள்: குளிர்காலம், கோடை மற்றும் பருவமழை காலம் இங்கு நிலவுகிறது. குளிர்காலம் நவம்பர் நடுப்பகுதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரையிலும் ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 10 °C (50 °F) ஆகும். கோடைக் காலம் மார்ச் முதல் மே இறுதி வரையிலும், வெப்பநிலை வரம்பானது 35–40 °C (95–104 °F) வரை உள்ளது. பருவமழை ஜூன் நடுப்பகுதியில் அல்லது ஜூலை தொடக்கத்திலிருந்து செப்டம்பர் வரை நீடிக்கின்றது.

சரணாலயத்தைப் பார்வையிட ஒரு சிறந்த நேரம் குளிர்காலத்தின் ஆரம்பமாகும். இச்சூழலில் நதிகளில் நீர் நிறைந்திருக்கும். அருகிலுள்ள பெரிய நகரமான சூரத் 100 கிலோமீட்டர்கள் (62 mi) தொலைவில் உள்ளது. சூரத்தில் ஒரு விமான நிலையம் உள்ளது. இது நாட்டின் பிற பகுதிகளுடன் விமானப் போக்குவரத்து தொடர்புகளை வழங்குகிறது. வியாரா அருகிலுள்ள இரயில் நிலையம். இது 20 கிலோமீட்டர்கள் (12 mi) தொலைவில் அமைந்துள்ளது. [3]

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், குஜராத் அரசு இந்த சரணாலயத்தில் மஹால் முகாமை பராமரிக்கிறது. [1]

விலங்குகள் மற்றும் தாவரங்கள்[தொகு]

இந்த சரணாலயம் வட மேற்குத் தொடர்ச்சி மலை ஈரமான இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழலுக்குள் உள்ளது .

சுமார் 700 வகையான தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன.[4]

இங்கு காணப்படும் சில காட்டு விலங்குகள் சிறுத்தை, செம்முகக் குரங்கு, குல்லாய் குரங்கு, கீரிப்பிள்ளை, இந்திய புனுகுப் பூனை, இந்திய முள்ளம்பன்றி, நாற்கொம்பு மான், கேளையாடு, கடமான், புள்ளிமான், வரிப்பட்டைக் கழுதைப்புலிமற்றும் காட்டுப்பூனை. நவ்சாரி மாவட்டத்தில் உள்ள வன்ஸ்தா தேசிய பூங்கா மற்றும் டாங்ஸ் வனப்பகுதி, [2] [5] மற்றும் நர்மதா மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்ளும் சூல்பனேஸ்வர் காட்டுயிர் காப்பகம். வங்காள புலி இந்த பகுதியில் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை எல்லையாகக் கொண்ட இடங்களில் புலிகள் காணப்படுகின்றன.[1] [6] இதனால் டாங்ஸ் வனம் புலியின் வாழ்விடமாக மாறுகிறது. [7]

1999 மற்றும் 2003க்கு இடையில், 139 பறவை இனங்கள் இங்குப் பதிவு செய்யப்பட்டன. இங்குக் காணும் பறவைகள் சில: இந்தியச் சாம்பல் இருவாச்சி, ஆசிய பார்பெட், மரங்கொத்தி, கீச்சான், பச்சைக்குருவி, பஞ்சுருட்டான், பழைய உலக ஈப்பிடிப்பான், வன ஆந்தை மற்றும் கொன்றுண்ணிப் பறவைகள். [2] [8]

2000-2001 இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இந்த சரணாலயம் 116 வகையான சிலந்திகளைக் கொண்டுள்ளது. [9]

மேலும் காண்க[தொகு]

  • இந்தியாவின் குஜராத்தின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களின் பட்டியல்
  • சபுதாரா

மேற்கோள்கள்[தொகு]