பூரி கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூரி கிழங்கு
பூரி மசால்
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி, மதிய உணவு, காலை உணவு
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்கோதுமை, உருளைக்கிழங்கு
வேறுபாடுகள்சோழாபூரி
பூரிமானே

பூரி பாஜி (Puri bhaji) என்பது தென்னிந்தியாவில் பூரி கிழங்கு என வழங்கப்படும் வட இந்திய உணவாகும். இது இந்தியத் துணைக் கண்டத்தில் உருவான ஒரு உணவாகும். இது பூரி மற்றும் ஆலூ (உருளைக்கிழங்கு) பாஜி (உலர்ந்த அல்லது உருளைக்கிழங்கு மசாலா உணவு) ஆகும்.[1] வட இந்தியாவில் இது ஒரு பாரம்பரிய உண்ணப்படும் காலை உணவாகும்.[2]

வீட்டில் செய்யப்படும் பூரிகள்

பல இந்திய குடும்பங்கள் காலை உணவிற்குத் தானியங்களை விடப் பூரி பாஜி மற்றும் பிற பாரம்பரிய உணவுகளை விரும்புகின்றன.[3][4] சிலர் தயிர் (தகி) மற்றும் சாலட் போன்ற சுவையூட்டும் பொருள்களுடன் மதிய உணவிற்குப் பரிமாறுகிறார்கள்.[5] மத்திய இந்தியாவில், பூரி பாஜி ஒரு தெருவோர சிற்றுண்டியாகக் கிடைக்கின்றது. பூரி பாஜி ஒரு சைவ உணவாகும். இது இந்தியாவில் மிகப் பிரபலமாக உள்ளது; ஏனெனில் இது ஒப்பீட்டளவில் மலிவானது மற்றும் சுவையானது.[6] இந்தியாவில் உள்ள இரயில்வே நிலையங்களின் நடைமேடைகளிலும் இந்த உணவு பரிமாறப்படுகிறது.[7] ஊறுகாயுடன் சேர்த்து தொடருந்துகளில் பூரி பொட்டலம் செய்யப்பட்ட உணவாக வழங்கப்படுகிறது.[8] பூரி பாஜியை அல்வாவுடன் பரிமாறலாம் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Brians, Paul (2003). Modern South Asian literature in English. Greenwood Publishing Group. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:031332011X. https://archive.org/details/modernsouthasian00bria. 
  2. Saxena, Rajan (2009). Marketing Management 4E. Tata McGraw-Hill Education. பக். 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0070144915. 
  3. Baisya, Rajat K. (2008). Changing face of processed food industry in India. Ane Books Pvt Ltd. பக். 171, 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8180521664. 
  4. Tharoor, Shashi (2006). India: From Midnight to the Millennium and Beyond. Arcade Publishing. பக். 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1559708034. 
  5. King, Niloufer Ichaporia (2007). My Bombay kitchen: traditional and modern Parsi home cooking. University of California Press. பக். 202, 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0520249607. https://archive.org/details/mybombaykitchent0000king. 
  6. "Aloo puri- Potato Puri - Chanchal's Kitchen-Punjabi Aloo Puri Recipe". Chanchal's Kitchen (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  7. "Jan Ahaar scheme gets going at rly station: Puri-Bhaji for Rs 10". இந்தியன் எக்சுபிரசு. 17 March 2011. http://www.indianexpress.com/news/jan-ahaar-scheme-gets-going-at-rly-station/763627/. 
  8. "'Janata khana' a hit with rail commuters". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 July 2009 இம் மூலத்தில் இருந்து 31 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130531101719/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-20/ludhiana/28183617_1_railway-station-khana-commuters. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரி_கிழங்கு&oldid=3742408" இலிருந்து மீள்விக்கப்பட்டது