பூரிபந்தா அப்பலா சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூரிபந்தா அப்பலா சுவாமி
பிறப்பு13 நவம்பர் 1904
சாலூர், விஜயநகரம் மாவட்டம்
இறப்பு18 நவம்பர் 1982(1982-11-18) (அகவை 78)
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர்

பூரிபந்தா அப்பலா சுவாமி (Puripanda Appala Swamy) (1904 – 1982), அப்பலாசுவாமி என்றும் அழைக்கப்படும் இவர் மொழியியலாளரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பத்திரிகையாளரும், பத்திரிக்கை ஆசிரியரும் ஆவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 1904 நவம்பர் 13ஆம் தேதி ஆந்திராவின் விசயநகர மாவட்டம் சாலூரில் பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு, தெலுங்கு, சமசுகிருதம், ஒரியா, இந்தி, வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

வாழ்க்கை[தொகு]

இந்திய சுதந்திர இயக்கத்தில் குறிப்பாக ஒத்துழையாமை இயக்கம், அரிசனர்களின் மேம்பாடு, காதி பிரச்சாரா இயக்கம் ஆகியவற்றில் இவர் தீவிரமாக பங்கேற்றார். விசாகப்பட்டினத்தில் அகில இந்திய காதி சங்கத்தில் அமைப்பாளராக பணியாற்றினார்.

இவர் ஊடகவியல் துறையில் வெவ்வேறு வகைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 'ஸ்வாசக்தி' என்ற தேசிய செய்தித்தாளின் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் "ஆந்திர பத்ரிகா" என்ற பத்திரிக்கையில் 12 ஆண்டுகளாக சுதந்திரமான பத்திரிகையாளராக கட்டுரைகளை எழுதி வந்தார். இவர் மிகவும் தகவல்கள் நிறைந்த தலையங்கங்களுடன் 'சத்தியவானி' என்ற பத்திரிகையை நடத்தி வந்தார் . இலக்கிய ஆர்வலர்களிடமிருந்து பாராட்டைப்பெற்ற 'வைசாக்கி' என்ற மாத இதழை வெளியிடட்டு வந்தார்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளரான சிறீ சிறீயை வெளிக்கொணர்ந்தார். [2]

ஆந்திராவில் நூலக இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பார்வதிபுரம், ஸ்ரீராமவரம் ஆகிய ஊர்களில் நூலகங்களை மேபடித்தினார். மேலும் மாராக்கம் என்ற இடத்தில் ஒரு நூலகத்தை நிறுவியுள்ளார். இவர் ஆந்திரப் பிரதேச நூலகச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தார்.

விசாகா எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், ஆந்திரப் பிரதேசத்தின் லலித கலா அகாடமியின் உறுப்பினராகவும், சாகித்ய அகாடமியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திய இலக்கியத்தில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1973ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தால் இவருக்கு கலாப்பிரபூர்ணா என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

இவர் நவம்பர் 18, 1982 அன்று தனது 78 வயதில் இறந்தார்.

மரியாதை[தொகு]

விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் இவருக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டது. சுருக்கமான சுயசரிதை புத்தகம் ஒன்று துவானா சாஸ்திரியும், பந்தி சத்யநாராயணா என்பவரும் இணைந்து எழுதி வெளியிடப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Litterateur's statue to be installed in city". The Hindu. 14 November 2005 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105060747/http://www.hindu.com/2005/11/14/stories/2005111412940300.htm. பார்த்த நாள்: 2 August 2013. 
  2. Mahakavi Srisri: Life and Works of Srirangam Srinivasa Rao by Būdarāju Rādhākr̥ṣṇa.
  3. "Litterateur's statue to be installed in city". The Hindu. 14 November 2005 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105060747/http://www.hindu.com/2005/11/14/stories/2005111412940300.htm. பார்த்த நாள்: 2 August 2013. "Litterateur's statue to be installed in city". The Hindu. 14 November 2005. Archived from the original on 8 February 2008. Retrieved 2 August 2013.

மேலும் படிக்க[தொகு]

  • Luminaries of 20th Century, Potti Sreeramulu Telugu University, Hyderabad, 2005.
  • Telugu tejam Puripanda Appalasvami : jivitam-sahityam: (Puripanda Appalasvami (1904–1982) satajayanti sanvatsara pracurana by Dva. Na Sastri, Visalandhra pablising haus, Hyderabad, 2005.
  • Oriya Sahitya Caritra, Potti Sreeramulu Telugu University, 2000. ISBN 81-86073-60-4; ISBN 978-81-86073-60-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரிபந்தா_அப்பலா_சுவாமி&oldid=3350593" இலிருந்து மீள்விக்கப்பட்டது