பூயா ரைய்மொண்டி
பூயா ரைய்மொண்டி | |
---|---|
![]() | |
பெருவின் அயாசுவில் காணப்படும் பூயா ரைய்மொண்டி | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | பூயா |
இனம்: | Template:Taxonomy/பூயாப. ரைய்மொண்டி
|
இருசொற் பெயரீடு | |
ப ரைய்மொண்டி ஹெர்மன் ஹார்ம்ஸ் |

பூயா ரைய்மொண்டி(Puya raimondii)[2] அல்லது ரைமொண்டி கோவ் (Raimondi Cove) அல்லது ஆண்டிஸ் ராணி (Queen of the Andes) (ஆங்கிலம்),[1][3] டைட்டாங்கா மற்றும் இலகுவாஷ் [2] எனவும் அறியப்படும் இது ஒரு பாலைவனச் செடியாகும். இது பொலிவியா மற்றும் பெருவின் உயரமான அந்தீசு மலைத்தொடர் பகுதிகளுக்கு சொந்தமானது.[1] இது ஒரு ஊனுண்ணித் தாவரமாக ஒரு காலத்தில் அனுமானிக்கப்பட்டது.[4] இவற்றில் 44 இனச் செடிகள் உள்ளன.
ஒற்றை விதையிலைத் தாவரத்தில் மிகப்பெரியதாக வளரும் செடியான இச்செடி 40 அடி உயரம் வளரக்கூடியது. இலைகள் வட்ட வடிவில் ரோஜாப்பூ போல் அமைந்திருக்கும். இச்செடி 150 ஆண்டுகள் ஆன பிறகே பூக்கிறது. இதனுடைய மலர் கொத்து 34 அடி நீளத்திற்கு வளருகிறது. இதில் 8000-க்கும் மேற்பட்ட வெள்ளை பூக்கள் மலர்கின்றன.

பூ முடிந்து விதை வந்தவுடன் இச்செடி இறந்துவிடுகிறது. மலர் கொத்தில் மிகப்பெரியது இதுவே ஆகும். மேலும் உலகில் மிக மெதுவாக பூக்கும் தாவரமும் இதுவே ஆகும்.
காணப்படும் பகுதிகள்
[தொகு]இச்செடி தென் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மற்றும் பெரு நாட்டில் வளர்கிறது.
ஒளிப்படங்கள்
[தொகு]-
Leaves
-
தாவரம்
-
மஞ்சரி
-
மஞ்சரி
-
பூ
-
பூவின் வெட்டுத் தோற்றம்
-
பூயா ரெய்மொண்டிய் அருகில் இத்தாலிய தாவரவியலாளர்
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lambe, A. 2009. Puya raimondii. The IUCN Red List of Threatened Species 2009. Downloaded on 09 September 2015.
- ↑ 2.0 2.1 "Bosque de Puyas de Raymondi (Titankayoq o Tikankayoq)". mincetur. Retrieved December 18, 2015. (Spanish)
- ↑ "San Francisco Botanical Garden - News - Rare Flower in Bloom at SF Botanical Garden". Sfbotanicalgarden.org. Retrieved 2016-01-18.
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Photographs of Puya raimondii. Florida Council of Bromeliad Societies.