பூயா இதானி
பூயா இதானி Pouya Idani پویا ایدنی | |
---|---|
![]() | |
நாடு | ஈரான் |
பிறப்பு | 22 செப்டம்பர் 1995 அகுவாசு, ஈரான் |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2014) |
பிடே தரவுகோள் | 2621 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2611 (சனவரி 2019) |
தரவரிசை | 286 |
பூயா இதானி (Pouya Idani) ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர். 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது. 2013 ஆம் ஆண்டில் பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். [1] [2] 2021 ஆம் ஆண்டு சூன் மாத நிலவரப்படி ஈரானின் 2 ஆவது சிறந்த சதுரங்க வீரர் என்ற சிறப்புடன் இருந்தார்.[3] 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னை நகர 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்
சதுரங்க வாழ்க்கை
[தொகு]இதானி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் உட்பட பல சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2015 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். அங்கு முதல் சுற்றில் அசர்பைசான் நாட்டு சதுரங்க கிராண்டுமாசுட்டர் சக்ரியார் மமேத்யரோ இவரை தோற்கடித்தார்.
2018 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற திறந்தநிலை போட்டியின் வெற்றியாளர் ஆனார்.
2008 ஆம் ஆண்டில் 7ஆவது துபாய் இளையோர் சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[4] சிங்கப்பூரில் நட்டைபெற்ற 4 ஆவது உலக பள்ளிகள் சதுரங்கப் போட்டியில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [5]
2009 ஆண்டு ஈரானிய 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் 2 ஆவது இடத்தைப் பெற்றார், [6] மேலும் உலக 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மேத்சு ஆண்டர்சனுடன் இணைந்து 5ஆவது இடத்தைப் பிடித்தார். [7]
இதானி [8] 2011 ஆம் ஆண்டு ஈரானிய 18 வயதுக்குட்பட்டோர் போட்டியில் வெற்றியாளர் பட்டம் வென்றார்.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக 18 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சியார்ச்சு கோரி, இயான் -கிரிசுடோஃப் துடா, கபோர் நாகி, காக்பர் துரோசுதோவ்சுகி மற்றும் விளாடிசுலாவ் கோவலேவ் ஆகியோருடன் இணைந்து 3 ஆவது முதல் 8 ஆவது இடங்களைப் பிடித்தார். [9]
மீண்டும் 2021 சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றார். அங்கு, 85 ஆவது இடத்தில் இருந்த இவர் முதல் சுற்றில் சியாவுர் ரகுமானை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார், இரண்டாவது சுற்றில் டேவிட் அன்டன் குய்சாரோவை 1.5-0.5 என்ற கணக்கில் தோற்கடித்தார். நான்காவது சுற்றின் இறுதியில் வெற்றியாளரான இயான் -கிரிசுடோஃப் துடாவால் இதானி வெளியேற்றப்பட்டார். [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WYCC | Standard Games Medal Winners". www.worldyouth2013.com. Retrieved 2020-06-21.
- ↑ "World Youth Championship: The champions". Chess News (in ஆங்கிலம்). 2013-12-31. Retrieved 2020-06-21.
- ↑ "Idani, Pouya FIDE Chess Profile - Players Arbiters Trainers". ratings.fide.com. Retrieved 2020-06-21.
- ↑ "Chess-Results Server Chess-results.com - 7th Dubai Juniors Chess Championship 2008". chess-results.com. Retrieved 2020-06-21.
- ↑ "Chess-Results Server Chess-results.com - 4th World Schools Chess Championships 2008 - Open U13". chess-results.com. Retrieved 2020-06-21.
- ↑ "The chess games of Pouya Idani". www.chessgames.com. Retrieved 2020-06-21.
- ↑ "Chess-Results Server Chess-results.com - WORLD YOUTH CHESS CHAMPIONSHIP 2009 (14)". chess-results.com. Retrieved 2020-06-21.
- ↑ "Iranian Chess Championship- Under 18(boys) 2011 March 2011 Iran FIDE Chess Tournament report". ratings.fide.com. Retrieved 2020-06-21.
- ↑ "Chess-Results Server Chess-results.com - World Youth Championships 2012 - U18 Open". chess-results.com. Retrieved 2020-06-21.
- ↑ "Tournament tree — FIDE World Cup 2021". worldcup-results.fide.com. Retrieved 2021-07-20.
புற இணைப்புகள்
[தொகு]- பூயா இதானி rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- Pouya Idani chess games at 365Chess.com
- பூயா இதானி player profile and games at Chessgames.com