உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இது 1997ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பு பெற்றது இது.

காட்சிப் பொருட்கள்

[தொகு]

சிரட்டைச் சில்லிகள், புத்தர் தலை மற்றும் புத்தர் பாத உருவாரம், பெருங்கல் மணிகள், உரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள், மரக்கலைப் பொருட்கள், வட்டக்கிணறு, பெருங்கற்கால சேர்ப்பொருட்கள், சீனச் சாடிகள், பிரித்தானிய குளிர்ச் சாடிகள், ஈயக்கட்டிகள், புத்தர் சிலை, சிலம்பு, ஐயனார் கற்சிலை, கப்பல் மாதிரி பொம்மைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]

மூலம்

[தொகு]
  1. "Poompuhar". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.

தமிழக தொல்லியல் துறை வலைதளம் பரணிடப்பட்டது 2012-09-24 at the வந்தவழி இயந்திரம்