பூமாலை (திரைப்படம்)
| பூமாலை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. நீலகண்டன் |
| தயாரிப்பு | மாறன் மேகலா பிக்சர்ஸ் |
| இசை | ஆர். சுதர்சனம் |
| நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
| வெளியீடு | அக்டோபர் 23, 1965 |
| நீளம் | 4424 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பூமாலை (Poomalai) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி கதை, உரையாடல் எழுதினார். இந்தப் படத்தை மு. கருணாநிதியின் தயாரிப்பு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் பதாகையின் கீழ் முரசொலி மாறன் தயாரித்தார், இந்தப் படத்தையும் அவர்களே விநியோகித்தனர். இப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, அஞ்சலிதேவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். எஸ். ஏ. அசோகன், நாகேஷ், மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.
கதைச்சுருக்கம்
[தொகு]பூமாலை தன் தந்தை மற்றும் அண்ணனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறாள். ஒரு கட்டத்தில் அடையாளம் தெரியான ஒருவனால் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். அதில் அவள் வயிற்றில் கரு உருவாகி குழந்தையும் பிறக்கிறது. குழந்தையை வளர்க்க அவர் படும் பாடுகளும், சமூகத்தில் அவள் சந்திக்கும் சிக்கள்களும், அவளுடைய வாழ்க்கை மோசமாக மாற்றுகின்றன. அவற்றில் இருந்து அவள் மீண்டுவந்தாளா என்பதே கதையின் முடிவாகும்
நடிப்பு
[தொகு]- சுந்தரமாக எஸ். எஸ். ராஜேந்திரன்
- பூமாலையாக சி. ஆர். விஜயகுமாரி[1]
- மரகதமாக அஞ்சலிதேவி
- சிட்டுவாக நாகேஷ்
- மைனாவாக மனோரமா
- ஆனந்தாக எஸ். ஏ. அசோகன்
- நளினாவாக ராஜஸ்ரீ
- டி. எஸ். முத்தையா பூமாலை மற்றும் ஆனந்தின் தந்தை
- லீலாவாக வி. ஆர். திலகம்
- சுப்பம்மாவாக எம். எஸ். பாக்யம்
தயாரிப்பு
[தொகு]பூமாலையை பி. நீலகண்டன் இயக்கினார், மு. கருணாநிதி எழுதிய இப்படத்தை, மேகலா பிக்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் தயாரித்தார். கலை இயக்கத்தை பி. நாகராஜனும், ஒளிப்பதிவை அமிர்தமும், படத்தொகுப்பை ஆர். தேவராஜனும் மேற்கொண்டனர்.[2] படத்தின் துவக்கத்தில் மு. கருணாநிதி திரையில் தோன்றி, படத்தின் தொடக்க உரையை ஆற்றினார்.[3] கருணாநிதி மேகலா பிக்சர்ஸின் உரிமையாளராக இருந்தபோதிலும்[4], அவர் படத்தின் தயாரிப்பாளராக குறிப்பிடப்படில்லை.[2]
கருப்பொருள்
[தொகு]கருணாநிதி தனது திரைப்படங்களின் வசனங்களில் சமகால அரசியலை புத்திசாலித்தனமாகப் பின்னிப் பிணைத்ததாக வரலாற்றாசிரியர் ஆர். கண்ணன் கூறுகிறார். மேலும், பூமாலையில் ஒரு உரையாடலைப் பற்றிக் கூறுகையில் தங்கை தன் அண்ணன் குறித்து உயர்வாகப் பேசுகிறாள், மேலும் தன் அண்ணனைப் பற்றி மோசமாகப் பேசுபவர்களை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டுகிறாள்.[5]
இசை
[தொகு]இப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்துள்ளார்.[6][7]
| பாடல்கள் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
|---|---|---|---|
| "பாதம்கீர்...ராணி டயமண்ட்" | சீதாராமன் | எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈசுவரி | 03:53 |
| "கன்னம் கன்னம்" | மு. கருணாநிதி | எல். ஆர். ஈசுவரி | 03:48 |
| "கட்டை விரல்" | குமாரதேவன் | பி. சுசீலா | 04:19 |
| "பெண்ணே உன் கதி" | மாயவநாதன் | சி. எஸ். ஜெயராமன் | 03:09 |
| "உலகமே எதிர்த்தாலும்" | மாயவநாதன் | சி. எஸ். ஜெயராமன் | 02:52 |
| "உன் எண்ணத்தை" | கவி ராஜகோபால் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:45 |
வெளியீடு
[தொகு]பூமாலை 1965 அக்டோபர் 23 அன்று,[8] அந்த ஆண்டின் தீபாவளி நாளில் வெளியானது.[9] மேகலா பிக்சர்ஸ் இந்த படத்தை சென்னையில் தாங்களே விநியோகித்தது, அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பிறர் விநியோகித்தனர்.[10] வரலாற்றாசிரியர் வாமனனின் கூற்றுப்படி, இந்த படம் கருணாநிதியை கடும் கடனில் சிக்கவைத்தது.[11]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sankaran, Keerthana (8 August 2018). "How Kalaignar's movie scripts show a subtle blend of Dravidian politics, mythology and women-centric stories". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 6 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190106055114/http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/aug/08/how-kalaignars-movie-scripts-show-a-subtle-blend-of-dravidian-politics-mythology-and-women-centric-1855011.html.
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;movieஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Swathi (4 September 2018). "கலைஞர் என்னும் கலைஞன் - 17 : பூமாலை" [Kalaignar alias the artist – 17: Poomalai]. Valai Tamil. Archived from the original on 21 February 2019. Retrieved 21 February 2019.
- ↑ Rathnagiri, R. (2007). Time capsule of Kalaignar. திராவிட முன்னேற்றக் கழகம். p. 63.
- ↑ Kannan, R. (2010). Anna: The Life and Times of C.N. Annadurai. New Delhi: Penguin Books. p. 197. ISBN 978-0-670-08328-2.
- ↑ "Poomaalai". JioSaavn. 31 December 1960. Archived from the original on 10 January 2019. Retrieved 10 January 2019.
- ↑ Saregama Tamil (4 March 2015). Poomalai | Tamil Movie Audio Jukebox. Archived from the original on 10 March 2022. Retrieved 5 January 2019 – via யூடியூப்.
- ↑ "திரையுலகில் கலைஞர்" (in ta). Dinamalar. 27 July 2018 இம் மூலத்தில் இருந்து 6 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190106010637/https://www.dinamalar.com/karunanidhi/newsdetail.asp?id=8.
- ↑ Dheenadhayalan, P. (3 March 2016). "அஞ்சலி தேவி: 5. சத்ய சாயீ!" (in ta). Dinamani இம் மூலத்தில் இருந்து 10 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190110091949/https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/mar/05/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-5.-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%80-1289593.html.
- ↑ "Poomalai". The Indian Express: pp. 3. 23 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651023&printsec=frontpage&hl=en.
- ↑ Vamanan (31 August 2018). "Rare scenes: When party lines blurred for Karuna". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 10 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190110091007/https://timesofindia.indiatimes.com/city/chennai/rare-scenes-when-party-lines-blurred-for-karuna/articleshow/65615025.cms.
- 1965 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஆர். சுதர்சனம் இசையமைத்த திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- சி. ஆர். விஜயகுமாரி நடித்த திரைப்படங்கள்
- அஞ்சலிதேவி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
