உள்ளடக்கத்துக்குச் செல்

பூமறிச்சான் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமறிச்சான் தீவு
பள்ளிவாசல் தீவு
புவியியல்
பரப்பளவு0.1789 km2 (0.0691 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

பூமறிச்சான் தீவு அல்லது பள்ளிவாசல் தீவு[1] (Pulli Tivu or Poomurichan Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும்.

இத்தீவானது பாம்பனில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவானது மேட்டுப் பகுதி, பெரியகண்டத் தீவு, நடுத்தீவு என முப்பகுதிகளைக் கொண்டது.

இத்தீவு தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமறிச்சான்_தீவு&oldid=4270853" இலிருந்து மீள்விக்கப்பட்டது