உள்ளடக்கத்துக்குச் செல்

பூமன்யு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமன்யு
பெற்றோர்கள்பரதன் (தந்தை), சுனந்தா (தாய்)
குழந்தைகள்திவிரதன், சுகோத்திரன், சுகோதன், சுகவி, சூயாஜு மற்றும் ரிஷிகா
நூல்கள்மகாபாரதம்
அரசமரபுசந்திர குலம்


பூமன்யு (Bhumanyu) (சமசுகிருதம்:भूमन्यु), சந்திர குல மன்னராக பரதனின் மகனும், துஷ்யந்தனின் பேரனும் ஆவார். மன்னர் பூமன்யுவின் வழித்தோன்றல்கள் குறித்து மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது.[1]

தொன்ம வரலாறு

[தொகு]

மகாபாரதததில் மன்னர் பூமன்யுவின் தோற்றம் குறித்து இரு விதமாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு இடத்தில் காசி நாட்டு மன்னர் சர்வசேனனின் மகளான சுனந்தாவை மணந்த மன்னர் பரதன் பூமன்யுவை பெற்றார் எனக்குறிப்பிடுகிறது. அதே மகாபாரத்தில் முனிவர் பாரத்துவாசர் உதவியுடன் மன்னர் பரதன் செய்த வேள்வியின் பலனாக பூமன்யுவை பெற்றெடுத்தார் எனக்குறிப்பிடுகிறது. [2]

மன்னர் பரதனின் ஓய்வு காலத்திற்குப் பின் பூமன்யு அரியணையில் அமர்ந்தார். பூமன்யுவின் மனைவி புஷ்கரணி மூலம் ஆறு குழந்தைகள் பிறந்தது.[3]பூமன்யுவின் இறப்பிற்குப் பின் அவரது மகன் சுகோத்திரன் அரியணை ஏறினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ganguli, Kisari Mohan. "The Mahabharata of Krishna-Dwaipayana". Internet Sacred Text Archive. Vyasa.
  2. Bhúmanyu.
  3. www.wisdomlib.org (2012-06-29). "Bhumanyu, Bhūmanyu: 6 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-27.
  4. www.wisdomlib.org (2019-01-28). "Story of Suhotra". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமன்யு&oldid=4363449" இலிருந்து மீள்விக்கப்பட்டது