பூபென் ஹசாரிகா பாலம்

ஆள்கூறுகள்: 27°47′55″N 95°40′34″E / 27.79861°N 95.67611°E / 27.79861; 95.67611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபென் ஹசாரிகா பாலம்
சதியா-தோலா பாலம்
ஆள்கூற்று27°47′55″N 95°40′34″E / 27.79861°N 95.67611°E / 27.79861; 95.67611
கடப்பதுபிரம்மபுத்திரா ஆறு
இடம்Tezu~namsaI bridge, அசாம், சதியா - தோலா, அருணாசலப் பிரதேசம், இந்தியா
அதிகாரபூர்வ பெயர்பூபென் ஹசாரிகா பாலம்
பராமரிப்புஇந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் நவயுக பொறியியல் நிறுவனம்
Characteristics
மொத்த நீளம்9.15 கிமீ
அகலம்12.9 மீ
அதிகூடிய தாவகலம்50 மீ
தாவகல எண்ணிக்கை183
History
கட்டத் தொடங்கிய நாள்நவம்பர் 2011
கட்டி முடித்த நாள்10 மார்ச் 2017
திறக்கப்பட்ட நாள்26 மே 2017

பூபென் ஹசாரிகா பாலம் (Bhupen Hazarika Setu or Dhola–Sadiya Bridge), 9.15 கிமீ நீளம் கொண்ட இந்தியாவின் நீளமான நீர்வழிப் பாலமாகும். [1][2]

அசாமிய கவிஞரும், பாடகருமான பூபென் ஹசாரிகாவின் நினைவாக இப்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, 26 மே 2017 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.[3][4]

பிரம்மபுத்திர ஆற்றின் பெரிய துணை ஆறான லோகித் ஆற்றின் மீது, அசாம் - அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் இப்பாலம் நிறுவப்பட்டது.

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் தனியார் துறையான நவயுக பொறியியல் நிறுவனம் இணைந்து, நவம்பர், 2011ல் துவங்கிய, 9.15 கிமீ நீளமுள்ள பூபென் ஹசாரிகா பாலத்தின் கட்டுமானப் பணி, 10 மார்ச் 2017ல் நிறையுற்றது. இப்பாலத்தின் கட்டுமானச் செலவாக ரூபாய் 2,056 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் திஸ்பூரிலிருந்து 540 கி.மீ. தொலைவில் உள்ள தின்சுகியாக்கு அருகில் உள்ள சதியாவிலிருந்து, அருணாச்சலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகருக்கு 300 கி.மீ. தொலைவில் உள்ள தோலாவை இணைக்கும் பூபென் ஹசாரிகா பாலத்தினால், பயணத் தொலைவு 165 கிலோ மீட்டராக குறையும், அதே போல் பயண நேரம் 7 முதல் 8 மணி நேரம் குறையும். அருணாசலப் பிரதேசம் மற்றும் அசாமின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பாலம் மிகவும் உதவும்.

இப்பாலம் 60 டன் எடை கொண்ட பீரங்கி வண்டிகள் செல்லும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. [5][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபென்_ஹசாரிகா_பாலம்&oldid=3222240" இருந்து மீள்விக்கப்பட்டது