பூபதிராஜு சிறீனிவாச வர்மா
பூபதிராஜு சிறீனிவாச வர்மா | |
|---|---|
| 15ஆவது கனரகத் தொழில்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 11 சூன் 2024 | |
| குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | எச். டி. குமாரசாமி |
| முன்னையவர் | கிருஷண் பால் |
| 21வது உருக்கு அமைச்சக அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 11 சூன் 2024 | |
| குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | எச். டி. குமாரசாமி |
| முன்னையவர் | பக்கன் சிங் குலாஸ்தே |
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு |
| தொகுதி | நரசாபுரம் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்திய மக்கள் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
பூபதிராஜு சிறீனிவாச வர்மா (Bhupathiraju Srinivasa Varma) ஆந்திராவின் பீமவரத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தில் நரசாபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் [1][2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]பூபதி ராஜு சிறீனிவாச வர்மா 1980இல் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் மாணவர் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1988இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1991-97 க்கு இடையில் பாஜக பீமாவரம் நகரத்தின் மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார். 2014ஆம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பீமாவரம் நகராட்சி பகுதி உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் 2020-23இலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றினார். 2024ஆம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி ஆதரவுடன் வர்மா நரசாபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 2.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் தற்பொழுது நரேந்திர மோதி அமைச்சரவையில் கனரகத் தொழிற்துறை அமைச்சராக உள்ளார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | முடிவு | வாக்கு | எதிரணி | வாக்கு | வாக்கு வித்தியாசம் |
|---|---|---|---|---|---|---|
| 2024 | நரசபுரம் | வெற்றி |
7,07,343 | குடுரி உமாபாலா | 4,30,541 | 2,76,802 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Narsapuram, Andhra Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Raju Bhupathi Wins with 276802 Votes Lead. He recently". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
- ↑ Quint, The (2024-06-04). "Narsapuram Election Result 2024 Live Updates: BJP's Bhupathi Raju Srinivasa Varma Has Won in This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ .
- ↑ "Narsapuram election results 2024 live updates: BJP's Bupathi Raju Srinivas Varma defeats YSRCP's Umabala Guduri by 2,76,802 votes". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/narsapuram-election-results-2024-andhra-pradesh-narsapuram-lok-sabha-elections-poll-result-updates-umabala-guduri-ysrcp-bupathi-raju-srinivas-varma-bjp-k-b-r-naidu-cong/articleshow/110669553.cms.