பூன் சங்-குவாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணவர்கள் சந்திப்பு ஒன்றில் பூன் சங்-குவாங்

பூன் சங்-குவாங் (Poon Chung-kwong) 1991 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஆங்காங் பல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். 1940 ஆம் ஆண்டு ஆங்காங்கில் குவாங் பிறந்தார். பேராசிரியரான இவருக்கு ஆங்காங்கில் வழங்கப்படும் உயரிய விருதான தங்க பௌனியா நட்சத்திர விருது, பிரித்தானிய பேரரசின் மிகச்சிறந்த அலுவலர் விருது, அமைதியின் நீதிமான் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. புனித பால்சு கூட்டுக் கல்வியியல் கல்லூரியில் குவாங் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். வேதியியலாளராகப் பயிற்றுவிக்கப்பட்ட இவர், இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் அறிவியல் மற்றும் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் வருகை தரும் அறிஞராக இருந்து வருகிறார். ஆங்காங்கின் மிகப்பெரிய அறிவியல் / தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசிய குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

ஆங்காங்கின் பிரபல நடிகரும் பாடகருமான லெசுலி சியூங் இவருடைய உறவினர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூன்_சங்-குவாங்&oldid=3859759" இலிருந்து மீள்விக்கப்பட்டது