பூனம் யாதவ் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனம் யாதவ்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு24 ஆகத்து 1991 (1991-08-24) (அகவை 32)
ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 82)16 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 107)ஏப்ரல் 12 2013 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபமார்ச் 14 2021 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 41)ஏப்ரல் 5 2013 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப20 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெதேது பெஒபது பெப இ20
ஆட்டங்கள் 1 46 66
ஓட்டங்கள் 73 12
மட்டையாட்ட சராசரி 7.30 3.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 15 4
வீசிய பந்துகள் 246 2394 1428
வீழ்த்தல்கள் 3 72 94
பந்துவீச்சு சராசரி 22.66 20.84 14.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/22 4/13 4/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 13/- 14/-
மூலம்: Cricinfo, 20 மார்ச் 2021

பூனம் யாதவ் (Poonam Yadav பிறப்பு: ஆகஸ்ட் 24, 1991) இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1][2] இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2013 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்[3], 2013 ஆம் ஆண்டில் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 73 ஓட்டங்களையும் , 62 பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி 12 ஓட்டங்களையும் 85 இலக்குகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2013 ஆம் ஆண்டில் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.இவர் 2013 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [4] ஏப்ரல் 12, அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.[5] [6] அந்தப் போட்டியில் 46 பந்துகளில் 15 ஓட்டங்களை எடுத்து அகமது பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்.

பன்னாட்டு இருபது20[தொகு]

2013 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். ஏப்ரல் 5,இல் வதோதராவில் நடைபெற்ற வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

2017 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குச் சென்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து அணியிடம் ஒன்பது ஓட்டன்கள் வித்தியாசத்தில் தோற்றது.[7][8] [9] ஜூன் 2018இல், பெண்கள் இருபது 20 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்து பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[10] அக்டோபர் 2018இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [11] [12] இந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் எட்டு ஆட்டமிழப்புடன், இந்த போட்டியில் இந்தியாவுக்காக அதிக இலக்குகள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார். [13] செப்டம்பர் 2018 இல் இருபது -20 சர்வதேச போட்டிகளில் 39 டி 20 போட்டிகளில் 57 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் எனும் பெருமை பெற்றார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2014 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 16, மைசூரில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

யாதவ் 1991 ஆகஸ்ட் 24 அன்று இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ராகுவீர் சிங் யாதவ். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவரது தாயின் பெயர் முன்னா தேவி. இவர் ஒரு இல்லத்தரசி.[14]

யாதவ் உத்தரபிரதேசத்தில் தனது பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்தார். இவர் உத்தரப் பிரதேச மாநில அணிக்காகவும் இரயில்வே அணிக்காவும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[15] பின்னர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஹேமலாதா கல என்பவர் இவரது பயிற்சியாளராக உள்ளார்.[16]

தனது துடுப்பாட்ட வாழ்க்கைக்காக இவர் ஆக்ராவிற்கு குடிபெயர வேண்டி இருந்தது.[17] அங்கு அவர் ஏக்லவ்யா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துடுப்பாட்டத்தில் இருந்து விலகினார். பின்னர் இவரின் தந்தையின் ஊக்கத்தினால் மீண்டும் விளையாடினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poonam Yadav". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  2. "Poonam Yadav". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  3. "Poonam Yadav". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  4. "Poonam Yadav". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  5. "Poonam Yadav". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  6. "Poonam Yadav". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
  7. Live commentary: Final, ICC Women's World Cup at London, Jul 23, ESPNcricinfo, 23 July 2017.
  8. World Cup Final, BBC Sport, 23 July 2017.
  9. England v India: Women's World Cup final – live!, The Guardian, 23 July 2017.
  10. "Poonam Yadav, Anam Amin vault to top five in T20I rankings". ESPNcricinfo (in ஆங்கிலம்). 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  11. "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  13. "ICC Women's World T20, 2018/19 - India Women: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.
  14. Thatte, Mamta (12 November 2018). "Poonam Yadav Biography: A Life Story Defining Astounding Strength & Shutting all Naysayers Poonam Yadav Biography | Height | Wiki | Profile". Voice of Indian Sports - KreedOn (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  15. Dinesh (23 May 2018). "Poonam Yadav (Cricketer) Wiki, Biography, Age, Matches, Images". News Bugz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  16. "Poonam Yadav (Cricketer) Height, Weight, Age, Boyfriend, Biography & More » StarsUnfolded". StarsUnfolded (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  17. "Poonam Yadav- The UP Wonder girl carving out her own niche". CricXtasy (in ஆங்கிலம்). Archived from the original on 15 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)