பூந்தோட்ட காவல்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூந்தோட்ட காவல்காரன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பூந்தோட்ட காவல்காரன்
இயக்கம்செந்தில்நாதன்
கதைலியாகத் அலிகான்
திரைக்கதைலியாகத் அலிகான்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
ஆனந்த்
வாணி விஸ்வநாத்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
விநியோகம்தமிழன்னை சினி புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு10 ஜுன் 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், இதனை அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், ராதிகா, ஆனந்த், வாணி விஸ்வநாத் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க 1988 ஆம் ஆண்டு ஜுன் 10ஆம் தேதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

செந்தில்நாதன், எம்.ஜி.ராமசந்திரனை வைத்து நம் நாடு படத்தை இயக்கிய ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார். எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் வி.அழகப்பன் ஆகியோரிடம் முன்னாள் உதவியாளராகப் பணியாற்றிய செந்தில்நாதன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.

பாடல்கள்[தொகு]

இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். [1]

எண். பாடல்கள் பாடியவர்கள் எழுதியவர் நீளம் (m:ss)
1 என் உயிரே வா எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா கங்கை அமரன் 04:31
2 அடி கானகருங்குயிலே கே. ஜே. யேசுதாஸ் 05:35
3 காவல்காரா காவல்காரா இளையராஜா 04:07
4 பாடாத தெம்மாங்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 05:32
5 பாராமல் பார்த்த நெஞ்சம் மனோ, சித்ரா 04:26
6 சிந்திய வெண்மணி கே. ஜே. யேசுதாஸ், பி.சுசீலா 04:22

வரவேற்பு[தொகு]

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி செந்தில்நாதன் இயக்கிய படங்களில் தலைசிறந்த படமாக இப்படம் கருதப்படுகிறது. 1980 களில் வந்த அதிரடி சார்ந்த படங்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடித்தது. விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இப்படம் அறியச் செய்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poonthotta Kaavalkaaran Songs". raaga. பார்த்த நாள் 2013-01-08.

வெளியிணைப்புகள்[தொகு]