பூத்தரேக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூத்தரேக்குலு
Pootharekulu (காகித இனிப்பு)
Pootharekulu dry fruits.jpg
பூத்தரேக்கு
(வெல்லம், பாதம், பிஸ்தா கலந்தவை)
மாற்றுப் பெயர்கள்காகித இனிப்பு
பரிமாறப்படும் வெப்பநிலைநொறுக்கு
தொடங்கிய இடம்ஆத்ரேயபுரம்
பகுதிகிழக்கு கோதாவரி
ஆக்கியோன்ஆத்ரேயபுரம்
பரிமாறப்படும் வெப்பநிலைஅறை வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள்அரிசி நொய்/உளுந்து, சர்க்கரைத் தூள் அல்லது வெல்லம், நெய்
வேறுபாடுகள்காய்கறி பூத்தாரெக்குளு
பிற தகவல்கள்நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல

பூத்தரேக்கு (பன்மை பூத்தரேக்குலு) ( Poothareku or Pootharekulu) என்பது ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆத்ரேயபுரம்[1] கிராமத்தில் தயாரிக்கப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு இனிப்பு வகையாகும்.[2] பூத்தா என்பது மேற்பூச்சு மற்றும் ரேக்கு என்பது விரிப்பு அல்லது தாள் என்றும் தெலுங்கு மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது. ரேக்கு என்பது ஒருமையையும் ரேக்குலு என்பது பன்மையையும் குறிக்கிறது. மடிக்கப்பட்ட காகிதத்தைப் போல இவ்வினிப்பு தோற்றமளிப்பதால் இதைக் காகித இனிப்புகள் என்றும் அழைக்கிறார்கள்.

வரலாறு[தொகு]

பூத்தரேக்கு சீவலைப் போன்ற ஒருவகை இனிப்பாகும். இந்த இனிப்பை தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் இக்கிராமம் புகழ்பெற்றுள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் இத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதிகச் சிறப்புகளுடன் மிகக் குறைவான கொள்முதல் விலையில் இங்கு இவை தயாரிக்கப்படுகின்றன. நகரங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டு இலாபமும் ஈட்டப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பூத்தரேக்கு செய்யும் விதம்

சயா பிய்யம் என்ற குறிப்பிட்டதொரு வகை அரிசி மாவுடன் (பிய்யம் என்பதன் பொருள் அரிசியாகும்) தூளாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து பூத்தாரெக்கு தயாரிக்கப்படுகிறது. அரிசிமாவு, நெய் பயன்படுத்தி விரிப்பு அல்லது தாள்களைத் தயாரித்து அவற்றின் மீது பூச்சாக சர்க்கரை அல்லது வெல்லம் பூசப்பட்டு அவற்றை மடித்துவிட்டால் பூத்தாரெக்கு தயாராகி விடுகிறது.[3]

வகைகள்[தொகு]

இடது பக்கத்தில் சர்க்கரையிலும் வலது பக்கத்தில் வெல்லத்திலும் செய்யப்பட்டது

பூத்தரேக்கு பொடி பொதுவாக தூளாக்கப்பட்ட சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது. இதையே சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் (நாட்டுச் சர்க்கரை) பயன்படுத்தி மற்றொரு வகை பூத்தாரெக்கு தயாரிக்கப்படுகிறது. மேலும் சாக்லேட், பாதாம், பிஸ்தா முதலியவைகள் கூட சேர்த்து செய்யப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்காக தனியாக சிறப்பு சர்க்கரையை கூட பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Integrated Management Information System (IMIS)". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. B.V.S. Bhaskar (3 July 2005). "Life, sweetened by `pootarekulu'". The Hindu. 7 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. G.V. PRASADA SARMA (April 6, 2016). "‘Putarekulu’ making set to get simpler". The Hindu. VISAKHAPATNAM. http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/putarekulu-making-set-to-get-simpler/article8439115.ece. பார்த்த நாள்: 6 April 2016. 


புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூத்தரேக்கு&oldid=3564575" இருந்து மீள்விக்கப்பட்டது