உள்ளடக்கத்துக்குச் செல்

பூதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூதோ நடனக் கலைஞர் கசுவோ ஓனோ
முஷிமாரு புஜீடா பூதோ பட்டறையின் கானொளிக் காட்சி

பூதோ (Butoh) என்பது யப்பானிய நடன அரங்கின் ஒரு கலை வடிவமாகும். இது நடனம், செயல்திறன் அல்லது இயக்கத்திற்கான பல்வேறு வகையான நடவடிக்கைகள், நுட்பங்கள் மற்றும் உந்துதல்களை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டில் இதன் இரண்டு முக்கிய நிறுவனர்களான தட்சுமி ஹிஜிகாட்டா மற்றும் கசுவோ ஓனோ ஆகிய இருவரும் இதை உருவாக்கினார்கள். இந்த கலை வடிவம் "நிலைத்தன்மையை எதிர்க்கிறது" என்று கருப்பொருளால் அறியப்படுகிறது.[1] மேலும் இதை வரையறுப்பது கடினம். குறிப்பாக, நிறுவனர் ஹிஜிகாட்டா தட்சுமி பூதோவின் முறைப்படுத்தலை "துயரம்" தொடர்புடன் பார்த்தார்.[2] கலை வடிவத்தின் பொதுவான அம்சங்களில் விளையாட்டுத்தனமான மற்றும் விசித்திரமான படங்கள், தடைசெய்யப்பட்ட தலைப்புகள் மற்றும் தீவிர அல்லது அபத்தமான சூழல்கள் ஆகியவை அடங்கும். இது பாரம்பரியமாக மெதுவான மிகை-கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்துடன் உடல் முழுவதும் வெள்ளை ஒப்பனையில் நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், காலப்போக்கில் பூதோ குழுக்கள் உலகம் முழுவதும் தங்கள் பல்வேறு அழகியல் இலட்சியங்கள் மற்றும் நோக்கங்களுடன் பெருகிய முறையில் உருவாகி வருகின்றன.

வரலாறு

[தொகு]
பூதோ கலைஞர்கள்

பூதோ முதன்முதலில் 1959 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய யப்பானில், தட்சுமி ஹிஜிகாட்டா மற்றும் கசுவோ ஓனோ ஆகியோரின் ஒத்துழைப்பின் கீழ், 1950 கள் மற்றும் 1960 களில் தோன்றியது.[3] பாரம்பரிய யப்பானிய நடன கலைகளுக்கு எதிர்வினைதான் இக்கலை வடிவத்தின் முக்கிய உத்வேகமாக இருந்தது. இது மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றுவதையும் நோஹ் போன்ற பாரம்பரிய பாணிகளைப் பின்பற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டது என்று ஹிஜிகாட்டா கூறுகிறார்.[4] அவர் மேற்கத்திய பாணி நடனம், பாலே போன்ற நவீனக் கலைவடிவங்களிருந்து விலகிச் செல்ல முயன்றார். மேலும் சாதாரண மக்களின் இயல்பான உடலசைவுடன் ஒரு புதிய அழகியலை உருவாக்க முயன்றார்.[5] [6]

விவாதம்

[தொகு]

பூதோவை உருவாக்கியவர் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் புதிய கலையை உருவாக்க கலைஞர்கள் பணியாற்றியதால், யப்பானிய கலைஞர்களும் சிந்தனையாளர்களும் பொருளாதார மற்றும் சமூக சவால்களிலிருந்து வெளிப்பட்டனர். இது கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களின் ஆற்றலையும் புதுப்பித்தலையும் உருவாக்கியது.

ஹிஜிகாட்டாவுடன் சில முறையான தொடர்புகளைக் கொண்ட பலர் தங்கள் சொந்த தனித்துவமான நடனத்தை “பூதோ” என்று அழைக்கத் தொடங்கினர். இவற்றில் இவானா மசாகி மற்றும் தெரு கோய் ஆகியவையும் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Waychoff, Brianne. "Butoh, Bodies and Being". Kaleidoscope. Retrieved 6 March 2014.
  2. Sanders, Vicki (Autumn 1988). "Dancing and the Dark Soul of Japan: An Aesthetic Analysis of "Butō"". Asian Theatre Journal 5 (2): 152. 
  3. Sanders, Vicki (Autumn 1988). "Dancing and the Dark Soul of Japan: An Aesthetic Analysis of "Butō"". Asian Theatre Journal 5 (2): 148–163. 
  4. Sanders, Vicki (Autumn 1988). "Dancing and the Dark Soul of Japan: An Aesthetic Analysis of "Butō"". Asian Theatre Journal 5 (2): 149. 
  5. Sanders, Vicki (Autumn 1988). "Dancing and the Dark Soul of Japan: An Aesthetic Analysis of "Butō"". Asian Theatre Journal 5 (2): 152. Sanders, Vicki (Autumn 1988). "Dancing and the Dark Soul of Japan: An Aesthetic Analysis of "Butō"". Asian Theatre Journal. 5 (2): 152. JSTOR 25161489.
  6. Sanders, Vicki (Autumn 1988). "Dancing and the Dark Soul of Japan: An Aesthetic Analysis of "Butō"". Asian Theatre Journal 5 (2): 149. 

நூல் ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூதோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதோ&oldid=4184969" இலிருந்து மீள்விக்கப்பட்டது