பூதேவ் முகோபாத்யாய்
பூதேவ் முகோபாத்யாய் | |
---|---|
![]() | |
பிறப்பு | 22 பெப்ரவரி 1827 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (present-day கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா) |
இறப்பு | 15 மே 1894 கொல்கத்தா | (அகவை 67)
படித்த கல்வி நிறுவனங்கள் | அலியா பல்கலைக்கழகம் |
பணி |
|
பூதேவ் முகோபாத்யாய் (Bhudev Mukhopadhyay 1827–1894) 19 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த ஒரு எழுத்தாளரும் அறிவுஜீவியும் ஆவார். வங்காள மறுமலர்ச்சி காலத்தில் இவரது படைப்புகள் தேசியவாதம் மற்றும் தத்துவத்தின் தீவிர வெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. இவரது அங்குரியா பினிமோய் (1857) என்ற புதினமே வங்காளத்தில் எழுதப்பட்ட முதல் வரலாற்றுப் புதினமாகும். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் பிப்ரவரி 22, 1827 இல் வடக்கு கொல்கத்தாவில் உள்ள 37, ஹரிடகி பாகன் லேனில், புகழ்பெற்ற சமசுகிருத அறிஞரான பண்டிட் பிசுவநாத் தர்கபூசனுக்கு மகனாகப் பிறந்தார். ஹூக்லி மாவட்டத்தில் உள்ள நதிப்பூர் ( கானகுல் ) இவரது பூர்வீக கிராமமாகும்.[2] இவர் சமசுகிருதக் கல்லூரி, மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தாவில்[3] கல்வி பயின்றார். மைக்கேல் மதுசூதன் தத் போன்ற பிற வங்காள மறுமலர்ச்சி நபர்களுடன் கல்வி பயின்றார். கொல்கத்தாவில் கல்வி பயின்ற பிறகு, பூதேவ் 1846 இல் இந்து ஹிதர்த்தி பள்ளியின் தலைமை ஆசிரியரானார். பின்னர் இவர் சந்தன்நகர் குருத்துவக் கல்லூரியினை நிறுவி அங்கு கல்வி கற்பித்தார். 1848 ஆம் ஆண்டு, கல்கத்தா மதரசாவில் (மதரசா 'அலியா) ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்தார். 1856 ஆம் ஆண்டில், ஹூக்லி நார்மல் பள்ளியின் முதல்வர் பதவிக்கு இவர் ஒரு போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவரது முன்னாள் வகுப்புத் தோழர் மைக்கேல் மதுசூதன் தத்தும் சக தேர்வராக இருந்தார். [4]
படைப்புகள்
[தொகு]- பரிபாரிக் பிரபாந்தா (1882) - கட்டுரை
- சமாஜிக் பிரபாந்தா (1892) - கட்டுரை
- ஆச்சார் பிரபாந்தா (1895) - கட்டுரை
- பிரகிருதிக் பிஜுனன் (இரண்டு பகுதிகளாக, 1858 & 1859) - புத்தகம்
- புரபிரத்தாசர் (1858) - புத்தகம்
- இங்கிலாந்தர் இதிகாசு (1862) - புத்தகம்
- உரோமர் இதிகாசு (1862) - புத்தகம்
- பங்களார் இதிகாசு (3வது பகுதி, 1904) - புத்தகம்
- குசேத்ரதத்வா (1862) - புத்தகம்
- புஸ்பாஞ்சலி (1வது பகுதி, 1876) - புத்தகம்
- அங்குரியா பினிமோய் (1857) - நாவல்
- ஐதிஹாசிக் உபன்யாஸ் (1857) - வரலாற்று நாவல்
- சுவப்னலப்தா பாரத்பார்சர் இதிகாசு (1895) - நாவல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Majumdar, Swapan, Literature and Literary Life in Old Calcutta, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, pp. 113–14, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563696-1.
- ↑ Bhudev Jibani (Ed. 1), Bhattacharya, Kashinath, Calcutta, 1911, p. 1
- ↑ Bhudev Jibani (Ed. 1), Bhattacharya, Kashinath, Calcutta, 1911, p. 1
- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in Bengali), p. 380, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0