பூதநீலகண்டர் கோயில்
பூதநீலகண்டர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
பெயர்: | बुढानिलकण्ठ मन्दिर |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாநிலம்: | மாநில எண் 3 |
மாவட்டம்: | காத்மாண்டு |
அமைவு: | பூதநீலகண்டம் |
ஆள்கூறுகள்: | 27°46′41″N 85°21′44″E / 27.7781°N 85.3622°E |
கோயில் தகவல்கள் |
பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple); (நேபாளி: बुढानिलकण्ठ मन्दिर (மொழிபெயர்ப்பு: (தொன்மையான நீலநிறத் தொண்டை), நேபாளத்தின் மாநில எண் 3ல், காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் எனுமூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். பூதநீலகண்டர் கோயில், காத்மாண்டு சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் உள்ளது.[1] பூதநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும்.[2]
மூலவர்
[தொகு]கோயில் மூலவரான பூதாநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச் சிலை ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட பூதாநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே, ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ministry of Culture, Tourism and Civil Aviation - Government of Nepal". www.tourism.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "Budhanilkantha, Nepal - Lonely Planet". lonelyplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ "Buddha Nilakantha Temple Nepal ~ Blog on vishnu temples". divyadesamyatra.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
வெளி இணைப்புகள்
[தொகு]