பூண்டி குச்சிப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பூண்டி குச்சிபாளையம் என்னும் ஊர் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி வட்டத்தில், அண்ணாகிராமம் ஒன்றியத்தில், பூண்டி பஞ்சாயத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் . இந்த கிராமத்தில் 100 வீடுகளுக்கும் குறைவாகவே உள்ளது. பேருந்து போக்குவரத்து இல்லாத ஒரு கிராமம். பூண்டி குச்சிப்பாளையம் கிராமத்தில் இருந்து அருகில் உள்ள பண்ருட்டி 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்காக இரண்டு கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்தோ கண்டரக்கோட்டை எனும் ஊருக்கு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து பண்ருட்டி நகரத்திற்கு செல்வர் அங்கே அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருவர். பூண்டி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊட்டியில் விளையும் கொடைக்கானலில் விலையும் கோஸ், காலி ஃபிளவர், நூக்குள் போன்ற காய்கறிகள் மிக செழிப்பாக வளரும் மற்றும் வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், கரும்பு, நெல், சவுக்கு, கொய்யாப்பழம் இன்னும் ஏராளமான விவசாயம் மிக செழிப்பாகவும் மிக அற்புதமாகவும் விலையும் ஒரு அற்புதமான பூமிதான் இந்த பூண்டி குச்சிபாளையம்.


கடலூர் மாவட்ட ஆட்சியாளராக திரு ககன்தீப் சிங் பேடி இருக்கும்பொழுது பூண்டி குச்சி பாளையத்தில் மட்டும் எப்படி இவ்வளவு செழிப்பாக விவசாயம் நடக்கிறது என்பதை பார்த்து ஆராய்ச்சி செய்வதற்காக இங்கே வந்திருந்தார் வந்து இந்த மண்ணை பரிசோதித்த பிறகு குச்சிபாளையம் என்ற ஊருக்கு மினி ஊட்டி என்று பெயர்சூட்டி விட்டு விட்டு சென்ற பெருமை பூண்டி குச்சிபாளையம் கிராமத்திற்கு உண்டு . பூண்டி குச்சிபாளையம் கிராமத்திற்கு மார்கழி மாதம் வந்து பார்த்தால் அனைத்து இடங்களிலும் கோஸ் காலிபிளவர் பரவலாக பயிரிடப்பட்டு இருப்பதை காணலாம் . பூண்டி குச்சிப்பாளையம் அருகே கட்ட முத்து பாளையம் என்னும் ஊரில் மலட்டாறு இருப்பதால் இங்கே நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லை எப்பொழுதும் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்கும்.


இங்கே நாற்றுப் பண்ணை தொழில் மிக அமோகமாக உள்ளது அதாவது தக்காளி, கத்தரிக்காய், மிளகாய்,கோஸ் காலி ஃப்ளவர் சாமந்திப் பூ போன்ற பயிர்களின் நாற்றுகள் இங்கே கிடைக்கும் இந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூண்டி குச்சிபாளையம் நோக்கி வந்து ஆயிரக்கணக்கான நாற்றுகளை வாங்கி செல்வர்.இந்த கிராமத்தில் கொய்யாப்பழ தோட்டம் என்பது மிக அதிகமாக பயிரிடப்படும் ஒரு பயிராகும் பல ஏக்கர்களில் சிகப்பு கொய்யா, வெள்ளை கொய்யா இரண்டும் பயிரிடப்பட்டு அமோக விளைச்சல் உள்ள கிராமம் தான் இந்த பூண்டி குச்சிபாளையம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி_குச்சிப்பாளையம்&oldid=3598885" இலிருந்து மீள்விக்கப்பட்டது