பூட்டான் நாடாளுமன்றம்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
பூட்டானின் பாராளுமன்றம்
Parliament of Bhutan

རྒྱལ་ཡོངས་ཚོགས་ཁང་;
Druki Gyelyong Tshokhang
எட்டாவது அவை
Coat of arms or logo
வகை
வகைஈரவை முறைமை
அவைகள்பூட்டானின் தேசிய சட்ட மேலவை
பூட்டானின் தேசிய சட்டமன்றம்
தலைமை
டிரக் கியால்ப்போஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
திசம்பர் 14, 2006 முதல்
தேசிய சட்ட மேலவைலியன்போ நம்கியே பெஞ்சோர், கட்சி சார்பற்றவர்
திசம்பர் 31, 2007 - சனவரி 29, 2008 முதல்
தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர்ஜிக்மே சாங்போ, மக்கள் குடியரசுக் கட்சி
ஆகஸ்டு 02, 2013 முதல்
அமைப்பு
உறுப்பினர்கள்72
24 மேலவை உறுப்பினர்கள்
47 கீழவை உறுப்பினர்கள்
சட்ட மேலவை அரசியல் குழுக்கள்கட்சி சாராதோர் (20)
நியமிக்கப்பட்டோர் (5)
2013 National Assembly of Bhutan Seat Composition.svg
சட்டமன்றம் அரசியல் குழுக்கள்     மக்கள் குடியரசுக் கட்சி (32)
     பூட்டான் அமைதிக் கட்சி (15)
Authorityபத்தாவது கட்டுரை, பூட்டானின் அரசமைப்புச் சட்டம்
தேர்தல்
சட்ட மேலவை இறுதித் தேர்தல்திசம்பர் 31, 2007 - சனவரி 29, 2008
சட்டமன்றம் இறுதித் தேர்தல்மே 31, 2013 - ஜூலை 13, 2013
கூடும் இடம்
கியெல்யாங் ஷொகாங், திம்பு
வலைத்தளம்
National Council of Bhutan
National Assembly of Bhutan

பூட்டானின் பாராளுமன்றம் (திஃசொங்கா மொழி: རྒྱལ་ཡོངས་ཚོགས་ཁང་; Wylie: rgyal-yongs tshogs-khang), பூட்டான் அரசரின் கீழ் இரு அவைகளை கொண்டது.[1][nb 1] 2007ஆம் ஆண்டு வரை ஓரவையை கொண்டிருந்த பாராளுமன்றம், பின்னர் ஈரவை முறைமையை ஏற்றுக் கொண்டது.

உறுப்பினர்கள்[edit]

பாராளுமன்றத்தின் மேலவையில் 25 உறுப்பினர்கள் இருப்பர். பூட்டானில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பூட்டானின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஐவரை பூட்டானின் அரசர் நியமிப்பார். சட்ட மேலவை ஆண்டுக்கு இருமுறையாவது கூட்டப்படுகிறது. உறுப்பினர்கள் கலந்தாலோசித்து, தங்களுக்கான தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கின்றனர். சட்ட மேலவையின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது சட்ட விதி.[nb 2][2] [3]

பாராளுமன்றத்தின் கீழவையான சட்டமன்றத்தில் 55 உறுப்பினர்கள் இருப்பர். பூட்டானின் பாராளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் வரையறுக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அத்தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராவார். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லைகள் வரையறை செய்யப்படுகின்றன. சட்டமன்றம் ஆண்டுக்கு இரு முறையாவது கூட்டப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் வாக்கெடுப்பின் மூலம் சட்டமன்றத்துக்கான சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் தேர்ந்தெடுக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகவோ, தனி வேட்பாளர்களாகவோ இருக்கலாம்.[nb 3][3][4]

அரசின் செயலாக்கப் பிரிவையும், அமைச்சரவையையும் அமைக்கும் முறையைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தேசிய சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைப் பெற்ற கட்சியோ, கட்சியின் கூட்டணியோ தங்களுள் ஒருவரை தலைவராக ஏற்கும். அவரை பூட்டானின் பிரதமராக பூட்டான் அரசர் நியமிப்பார்.[nb 4] பிரதமராக பதவியேற்பவர் அதிக பட்சம் இரு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும்.[nb 5] பிரதமரின் ஆலோசனைப்படி, மற்ற அமைச்சர்களையும் அரசரே நியமிப்பார்.[nb 6] அனைத்து அமைச்சர்களும் பூட்டானின் குடிமக்களாக இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக இரு அமைச்சர்களே தேர்வாக முடியும்.[nb 7]

பூட்டானின் அரசர் சட்ட முன்வரைவுகளை பார்வையிட்டு, ஒப்புதல் அளிக்கிறார்.[nb 8]

அதிகாரங்களும் செயல்படும் முறையும்[edit]

சட்ட மேலவையும், சட்டமன்றமும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களைப் பெற்று, தமக்குரிய பணிகளை செய்ய கடமைப்பட்டுள்ளன.[1] தேசிய சட்டமேலவைக்கு தனி சட்டமும்[2], தேசிய சட்டமன்றத்துக்கு தனி சட்டமும் உண்டு.[4] இந்த சட்டங்களில் வாக்கெடுப்பு, செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. உறுப்பினர்களின் தவறான செயல்பாடுகளுக்கான தண்டனைகளும், பதவி நீக்கத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.[2][4]

செயலாக்க அதிகாரங்கள்[edit]

பாராளுமன்றத்தின் முக்கிய அதிகாரங்களுள் குறிப்பிடத்தக்கது சட்ட முன்வரைவை வாக்கெடுப்புக்கு விடுவது ஆகும். பண விவகாரங்களுடன் தொடர்புடைய சட்ட முன்வரைவை சட்டமன்றம் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஏனைய அனைத்து சட்டமுன்வரைவுகளையும், சட்டமேலவையோ, சட்டமன்றமோ, அட்டர்னி ஜென்ரலோ தாக்கல் செய்ய முடியும்.[nb 9][5] வாக்கெடுப்புகள் இரு அவைகளிலும் நடத்தப்படும்.[nb 10] ஒரு அவையினால் ஏற்படுத்தப்பட்ட முன்வரைவு மற்றொரு அவையில் முப்பது நாட்களுக்குள் ஏற்கப்பட வேண்டும். அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தில் சட்டமுன்வரைவு சட்டமாக ஏற்கப்படும்.[nb 11] அவசர காரியங்கள், நிதித்துறை தொடர்பான சட்டங்கள் அதே கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.[nb 12] எந்தவொரு சட்டமுன்வரைவையும் நீக்கவும், மாற்றியமைக்கவும் அரசருக்கு உரிமை உண்டு. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்ட சட்டமுன்வரைவுக்கு அரசர் ஒப்புதல் அளித்தாக வேண்டும்.[nb 13]

மற்ற அதிகாரங்கள்[edit]

பூட்டானின் சர்வதேச எல்லைகளையும், உட்பிரிவுகளின் எல்லைகளையும் மாற்றியமைக்கும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பு பாராளுமன்றம் மட்டுமே. எல்லைகளை மாற்றியமைக்க மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.[nb 14] உள்ளாட்சிப் பிரிவுகளை மேற்பார்வையிடும் பணியையும் பாராளுமன்றம் மேற்கொள்கிறது.[6]

அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தேசிய சட்டமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், அரசர் அரசை கலைப்பார்.[nb 15]

சான்றுகள்[edit]

 1. 1.0 1.1 "Constitution of the Kingdom of Bhutan (English)" (PDF). பூட்டான் அரசு (2008-07-18). பார்த்த நாள் 2010-10-13.
 2. 2.0 2.1 2.2 {{cite web| url=http://www.nationalcouncil.bt/images/stories/NC_Act_08_Eng.pdf |format=PDF |title=National Council Act 2008 |publisher= பூட்டான் அரசு |year=2008 |accessdate=2011-01-02}}
 3. 3.0 3.1 "[http://www.nationalcouncil.bt/images/stories/Elec_Eng_08.pdf Election Act of the Kingdom of Bhutan 2008]" (PDF). பூட்டான் அரசு (2008-07-28). பார்த்த நாள் 2011-01-30.
 4. 4.0 4.1 4.2 "National Assembly Act 2008" (PDF). பூட்டான் அரசு (2008-08-12). பார்த்த நாள் 2011-01-02.
 5. "[http://www.oag.gov.bt/wp-content/uploads/2010/07/Office-of-the-Attorney-General-Act-of-Bhutan- 2006_English.pdf Office of the Attorney General Act of Bhutan 2006]" (PDF). பூட்டான் அரசு (2006-06-30). பார்த்த நாள் 2011-01-23.
 6. "Local Government Act of Bhutan 2009" (PDF). பூட்டான் அரசு (2009-09-11). பார்த்த நாள் 2011-01-20.
 1. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை 1, § 3; கட்டுரை 10
 2. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 11
 3. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 12
 4. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 17, § 1
 5. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 17, § 2
 6. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 17, § 3
 7. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 17, §§ 4, 5
 8. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 13; கட்டுரை: 35
 9. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 13, § 2
 10. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 13, §§ 8, 9
 11. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 13, § 5
 12. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 13, § 5
 13. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 13, §§ 10, 11
 14. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை: 1, § 4
 15. அரசமைப்புச் சட்டம்: கட்டுரை 7, §§ 6, 7

இணைப்புகள்[edit]