உள்ளடக்கத்துக்குச் செல்

பூட்டான் தேசிய அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 27°25′43″N 89°25′32″E / 27.42873°N 89.42556°E / 27.42873; 89.42556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டான் தேசிய அருங்காட்சியகம்
National Museum of Bhutan
பூட்டான் தேசிய அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1968
அமைவிடம்பாரோ, பூட்டான்
ஆள்கூற்று27°25′43″N 89°25′32″E / 27.42873°N 89.42556°E / 27.42873; 89.42556
சேகரிப்பு அளவு3000
உரிமையாளர்பூட்டான் அரசாங்கம்
அருகில் உள்ள தானுந்து நிறுத்துமிடம்ஆம்
வலைத்தளம்https://www.nationalmuseum.gov.bt/
பெண் துறவிகளுக்கான புத்த கல்லூரியிலிருந்து டா திசோங் கட்டடத்தின் தோற்றம்

பூட்டான் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Bhutan) என்பது மேற்கு பூட்டானில் உள்ள பரோ நகரில் அமைந்துள்ள ஒரு பண்பாட்டு அருங்காட்சியகமாகும்.

வரலாறு

[தொகு]

1968 ஆம் ஆண்டு, பூட்டானின் மூன்றாவது பரம்பரை மன்னரான மன்னர் இயிக்மே தோர்ச்சி வாங்சக்கின் கட்டளையின் கீழ், புத்த மடாலயம் இரின்பங் டிசோங்கிற்கு மேலே புதுப்பிக்கப்பட்ட பண்டைய டா டிசோங் கட்டிடத்தில் நிறுவப்பட்டது.[1] வெண்கல சிலைகள் மற்றும் ஓவியங்களின் தலைசிறந்த படைப்புகள் உட்பட, பூட்டானிய கலையின் சில சிறந்த மாதிரிகளை வைக்க தேவையான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. விரிவான சேகரிப்புகளை வைக்க பொருத்தமான காட்சியகங்கள் கட்டப்பட்டன. கலைப் படைப்புகள் அறிவியல் முறைகளில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இன்று, பூட்டான் தேசிய அருங்காட்சியகத்தில் 3,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பூட்டானிய கலைப் படைப்புகள் உள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பூட்டானின் கலாச்சார பாரம்பரியத்தை உள்ளடக்கியவையாகும். பல்வேறு படைப்பு மரபுகள் மற்றும் துறைகளின் வளமான இருப்புக்கள், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் குறிப்பிடத்தக்க வகையில் கலந்துள்ளன. இவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாகும்.[2]

பூட்டானில் அருங்காட்சியக இயக்கத்தின் தோற்றம், கி.பி 7 ஆம் நூற்றாண்டில் திபெத்தின் 33 ஆவது பௌத்த மன்னர் சாங்ட்சன் காம்போவால் பரோ கிச்சு லகாங் மற்றும் பும்தாங் இயம்பே லகாங் ஆகிய புத்த கோயில்களின் கட்டுமானத்துடன் தொடங்கி மடங்கள் மற்றும் கோயில்களை நிறுவுவதில் இருந்து அறியப்படுகிறது.[3]

கட்டடக்கலை

[தொகு]

பூட்டான் தேசிய அருங்காட்சியகத்தைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பரோ தா திசோங் கட்டடம், 1649 ஆம் ஆண்டில் பரோ பள்ளத்தாக்கின் முதல் ஆளுநரால் கட்டப்பட்டது. பொன்லோப் டென்சின் திருக்ட்ரா 2ஆவது திருக் தேசி (பூட்டானின் தற்காலிகத் தலைவர்) ஆனார். 1656 ஆம் ஆண்டு முதல் 1658 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்தார். இவர் இயப்த்ருங் நகாவாங் நம்கியேலின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

டா திசோங் 1651 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, திபெத்திய படையெடுப்புகளுக்கு ஒரு புறக்காவல் நிலையமாகவும், கண்காணிப்பு கோபுரமாகவும் செயல்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Museum, Paro, Bhutan | Attractions". Lonely Planet. Retrieved 2024-10-26.
  2. Rangarajan, Malathi (2018-03-29). "Bhutan museums — rich sources of information" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/society/history-and-culture/bhutans-museums-reflect-their-culture-and-lifestyle/article23381728.ece. 
  3. 3.0 3.1 Dorji, Chenkyo Tshering (2005). A compendium of chief Kagyu masters: = Bka' brgyud bla chen rnams kyi don bsdus. Paro, Bhutan: Published by Tandin Dolma, in collaboration with Prominent Publishers. ISBN 978-81-86239-17-9.

வெளி இணைப்புகள்

[தொகு]

27°25′43″N 89°25′32″E / 27.42873°N 89.42556°E / 27.42873; 89.42556