உள்ளடக்கத்துக்குச் செல்

பூட்டான் சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டான் சின்னம்.

பூட்டானின் சின்னம், (Emblem of Bhutan) பூட்டான் நாட்டின் தேசியக் கொடியில் உள்ள பல்வேறு உட்கூறுகளைச் சற்று வேறுபட்ட கலைத்துவத்துடன் வெளிப்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பல்வேறு பௌத்த அடையாளங்கள் காணப்படுகின்றன.

அதிகாரபூர்வ விளக்கம்

[தொகு]

சின்னத்தின் வடிவமைப்பு

[தொகு]

ஒரு வட்டத்தில் அமைந்துள்ள இத்தேசிய சின்னமானது, ஒரு தாமரைக்கு மேல் வைக்கப்பட்டுள்ள இரட்டை வைர வஜ்ராயுதம், இருபுறங்களில் இரண்டு கடல் நாகங்கள், இரட்டை வஜ்ராயுதத்தின் மேற்புறத்தில் ஒரு நகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சின்னத்தின் விளக்கம்

[தொகு]

வஜ்ராயுதம் மதச்சார்பற்ற மற்றும் சமய சக்திகளுக்கு இடையிலான ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. தாமரை தூய்மையின் அடையாளமாகவும், நகை பேரரசு அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறது. நாட்டின் பெருமையை ஆண், பெண், இருகடல் நாகங்களும், தங்கள் பெரிய குரல் வாயிலாக, இடிமுழக்கத்துடன் கூடிய பிரகடனம் செய்யும் வகையில் நிற்கின்றன. தங்கம், தேன், சிவப்பு முதலிய குறியீட்டு நிறங்களில் கலந்து இச்சின்னம் காட்சியளிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_சின்னம்&oldid=2360924" இலிருந்து மீள்விக்கப்பட்டது