பூஞ்ச் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூஞ்ச் ஆறானது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறாகும். நீல் காந்த்  காலி மற்றும் ஜமியன் காலி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பீர் பஞ்சால் மலை தொடர்களின் மேற்கு பகுதி மலை அடிவாரத்தில் இந்த ஆறு தோன்றுகிறது. இந்த பகுதிகளில் இது சைரன் என்று அழைக்கபடுகிறது. பின்னர் வட மேற்காக ஓடி மங்களா ஏரியில் சோமுக் என்ற பகுதில் நுழைகிறது. பூன்ச், செஹரா, டாட்டா, பாணி  மற்றும் கோட்லி ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் நதி கரைகளில் அமைந்துள்ளது. பெட்டார் மற்றும்  சுவான் ஆகிய இரு கிளை ஆறுகள் இதற்கு உண்டு. [1]

குறிப்புகள்[தொகு]

  1. Negi, Sharad Singh (1991). Himalayan Rivers, Lakes and Glaciers. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85182-61-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்ச்_ஆறு&oldid=2358276" இருந்து மீள்விக்கப்பட்டது