பூஞ்சார் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூஞ்சார் அரண்மனை (Poonjar Palace) என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரணமனையாகும். இந்த அரண்மனையானது மத்தியகால கேரளாவில் வாழ்ந்த மதுரை பாண்டிய அரசர்களின் பரம்பரைகளின் பரம்பரையினரான பூஞ்சார் பேரரசர்களின் அரண்மனையாகும். இந்த மாளிகையில் அரசர்கள் சேமித்துவைத்த அரிதான அலங்காரப் பொருட்கள், தனித்துவமான மரப் பொருட்கள், பல்லக்கு, அலங்கார சார விளக்குகள், மசாஜ் செய்து கொள்வதற்காக ஒற்றை மரத்தில் செதுக்கபட்ட பட்டி, மரத்தென்னங்கீற்று செதுக்கல்கள், நகைப்பெட்டிகள், பலவகையான வண்ண விளக்குகள், நடராசர் சிலை போன்ற உலோகச் சிற்பங்கள், தானிய அளவைகள், ஆயுதங்கள் போன்றவை காட்சிப்படுத்தபட்டுள்ளன. இந்த மாளிகைக்கு அருகில் அச்சு அசலாக மதுரை மீனாட்சி கோயிலின் வடிவு உள்ளது. இந்தக் கோயில் சுவரில் பழந்தொண்மக் கதைகள், ஒவியங்களாகவும், சிற்பங்களாகவும் வடிக்கபட்டுள்ளன. இதன் அருகல் உள்ள சாஸ்தா கோயிலில் ஒற்றைக் கல்லில் வடிக்கபட்ட சுட்டு விளக்கு உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சார்_அரண்மனை&oldid=3020917" இலிருந்து மீள்விக்கப்பட்டது