பூஜ்ய நிழல் நாள்

பூஜ்ய நிழல் நாள் (Zero Shadow Day) என்பது நிழல் காண இயலா நாள் அதாவது சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறியலாம். பொதுவாக, சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக்குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும். ஆனால், ஓர் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில் கூட காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காணஇயலா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது. பொருளின் அடியில் தோன்றும் இந்த நிழலினை சில சிறிய உபகரணங்கள் கொண்டு நம்மால் காண இயலும்.[1]
பூஜ்ஜிய நிழல் நாள் எப்போது தோன்றும்?[தொகு]
நம் புவியானது, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. பூமியின் அச்சானது சூரியனைச் சார்ந்து 23.45°கோணத்தில் (தோராயமாக 23.5°) சாய்வாக சுற்றுகிறது. இதனால் பருவநிலை மாறுபாடுகள் உண்டாகின்றது.

இதேபோல் பூமியின் தென்துருவம் சூரியனை நோக்கி 23.5° சாய்வாக உள்ளபோது வட துருவம் நீண்ட இரவும் தென்துருவம் நீண்ட பகலும் கொண்டிருக்கும். இதனை ஜூன் சங்கிராந்தி என்பர்.
பூஜ்ய நிழல் நாள் எப்பகுதியில் உருவாகும் ? எந்த மாதத்தில் உருவாகும்?[தொகு]
பூமியின் நிலநடுக்கோட்டிலிருந்து அட்சரேகை 23.5° அளவில் உள்ள தென் மண்டலப் பகுதியும், (மகரரேகை) மற்றும் 23.5° உள்ள வட மண்டலப்பகுதியும் (கடக ரேகை) வருடத்தின் இரண்டு நாட்களில் சூரியனை மிகச் சரியாக அதன் சிகர உச்சியில் (Zenith) பெறும். இங்கு பூஜ்ய நிழல் நாள் ஏற்படும். வடதுருவ மகரரேகையில் +23.5° மற்றும் +90° வரை உள்ள பகுதிகளும் தென் துருவ கடகரேகையில் -23.5° மற்றும் -90° வரை உள்ள பகுதிகளில் சூரியன் சிகர உச்சியை அடையாது. எனவே அப்பகுதிகளில் இந்த சூரிய நிகழ்வு நடைபெறாது. இந்த சூரிய நிகழ்வு டிசம்பர் சங்கிராந்தி மற்றும் உத்தராயணம் இடைப்பட்ட காலத்திலோ அல்லது உத்தராயணம் மற்றும் ஜூன் சங்கிராந்திக்கு இடைப்பட்ட காலத்திலோ அல்லது ஜூன் சங்கிராந்தி மற்றும் தட்சிணாயணத்தில் இடைப்பட்ட மாதத்திலோ ஏற்படும்.[2]
பூமியின் நிலநடுக் கோட்டின் வட அல்லது தென் துருவத்திலிருந்து சூரியனுக்கு உள்ள கோணத் தொலைவை சூரியனின் சாய்வுத் தொலைவு என்போம். எப்போது இந்தத் சூரியனின் சாய்வுத் தொலைவு நம் பகுதியின் அட்சரேகையின் மதிப்புக்கு சமமாக உள்ளதோ, அப்போது சூரியனானது அப்பகுதியில் சிகர உச்சியை அடையும். இதனால் உருவாகும் நிழலானது அப்பொருளுக்கு அடியிலே சில மணித்துளிகள் நீடிப்பதால் நம்மால் அப்பொருளின் நிழலை காண இயலாது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Zero Shadow Day" (in en-US). 2017-04-07. https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/.
- ↑ Newsd (2019-04-24). "Zero Shadow Day 2019: Date, time & know why you cannot see your shadow" (in en-US). https://newsd.in/zero-shadow-day-2019-date-time-know-why-you-cannot-see-your-shadow/.