பூஜா பேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்பு11 மே 1970 (1970-05-11) (அகவை 53)[1]
மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகை, தொலைகாட்சி பங்களிப்பாளர்,பத்திரிக்கையாளர்.
பெற்றோர்கபீர் பேடி (தந்தை)
புரோடிமா பேடி (அம்மா)
வாழ்க்கைத்
துணை
ஃபர்ஹான் (1994–2003; divorced)
பிள்ளைகள்2

பூஜா பேடி பாலிவுட்டின் முன்னாள் நடிகையாவார் (பிறப்பு: 1970). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார். நடிகர் கபீர் பேடி இவரது தந்தையாவார். தாயார் புரோத்திமா பேடி இந்தி மொழியில் பிக் பாஸ் என்ற புகழ் பெற்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்.

வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலின் தொடர்ச்சியும் (1970–2006)[தொகு]

நடிகர் கபீர்பேடிக்கும் நடிகையும் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமான புரோத்திமா பேடி என்பாருக்கும் மகளாக மும்பையில் பிறந்தார். சமூகவியலில் அக்கறையுள்ள செயல்பாட்டளராக இவர் தன்னை வெளிபடுத்திக்கொண்டுள்ளார்.[1] மும்பையிலுள்ள பெசன்ட் மாண்டிசோரி கல்வி நிலையத்தில் ஆரம்பக் கல்வியை பயின்று பின்னர் சானவார் என்ற ஊரிலுள்ள லாரன்ஸ் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை பாலிவுட் திரைப்படங்களுக்கான பல விளம்பரங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் பணியாற்றியுள்ளார். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரசாரத்திற்காக நடித்த காமசூத்ரா ஆணுறை விளம்பரப் படத்திற்காக இவர் நினைவுபடுத்தப்படுகிறார்.[2] கேரி ஆன் பாப்பா', வாவ் வாட் எ கேர்ள் மற்றும் பெங்காலி ஜாத்ரா போன்ற நாடகங்களில் அவர் நடித்துள்ளார்.[2] ஜக் முந்த்ரா என்பவர் இயக்கிய விஷ்கன்யா (1991) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டில் அவர் அமீர் கான் உடன் ஜோ ஜீதா வோஹிகி சிகந்தர் படத்தில் நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் லூட்ரே (1993) மற்றும் ஆத்தாங்க் ஹாய் ஆத்தாங்க் (1995) போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

திருப்பம் தந்த பாத்திரம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்(2006-11)[தொகு]

2000 ஆவது ஆண்டில் இவர் தனது தாயின் புரோத்திமா பேடி நினைவாக டைம்பாஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் மிட் டே போன்ற பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார். 2000 ஆவது ஆண்டில், "எல்ஆபீஸர்" "ஃபெமினா" மற்றும் "தி வீக்"' போன்ற பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் அமிதாப் பச்சன் உடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தார்.[3]

2005 ஆம் ஆண்டில், ஹனீஃப் ஹிலால் என்பவருடன் நாக் பாலியே என்ற திரைப்படத்தில் இடம் பெற்றார். 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேடி ஜலக் டிக்லா ஜா படத்தில் இடம் பெற்றார், அதன்பிறகு 2011 இல் ஃபியர் ஃபேக்டர்: கட்ரோன் கே கிலாடி ' என்ற நிகழ்ச்சியிலும், இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" இன் 5வது நிகழ்ச்சியின் ஒரு பிரபலமான போட்டியாளராகவும் தோன்றினார்.[4] "பிக் பாஸ் வீட்டில் 8 வாரங்கள் தங்கியிருந்த பின்னர் வெளியேற்றப்பட்டார்[5]

சொந்த வாழ்க்கை[தொகு]

பேடி 1990 ஆம் ஆண்டில் தான் சந்தித்த ஃபர்ஹான் இப்ராஹிம் ஃபர்னீச்சர்வாலா என்பவரை மணந்து கொண்டார்..[1] இவருக்கு 1997 ஆம் ஆண்டில் அலியா ஃபர்னீச்சர்வாலா என்ற மகள் பிறந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் ஒமர் இப்ராஹிம் என்ற மகன் பிறந்தார்.[2]. 2003 ஆம் ஆண்டில் பேடி மற்றும் ஃபர்ஹான் இடையே விவாகரத்து ஏற்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_பேடி&oldid=2951520" இருந்து மீள்விக்கப்பட்டது