பூஜா குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூஜா குமார்
Pooja Kumar at Promotions of 'Vishwaroop' with Videocon (01) (cropped).jpg
விஸ்வரூபம் திரைப்பட அறிமுக விழாவில் பூஜா குமார்
பிறப்பு4 பெப்ரவரி 1977 (1977-02-04) (அகவை 44)
செயின்ட் லூயிஸ் (மிசூரி), ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிநடிகை, வடிவழகி, தொலைக்காட்சித் தொகுப்பாளினி, தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று
வலைத்தளம்
http://www.poojakumar.com

பூஜா குமார் (Pooja Kumar, பிறப்பு: பெப்ரவரி 4, 1977) என்பவர் இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். இந்திய திரைப்படங்களில் நடித்தமையால் பரவலாக அறியப்படுகின்றார். மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தை வென்ற பிறகு,  அமெரிக்க நடிகையாக, தயாரிப்பாளராக மற்றும் வடிவழகியாக தனது உலகளாவிய  பணியைத் தொடங்கினார். பிரகாசமான புதிய நட்சத்திரங்கள் போட்டியில் 60,000 போட்டியாளர்களில் ஒருவராக இந்திய நடிகர் அமிதாப் பச்சனினால் தேர்நதெடுக்கப்பட்டார். அவரால் பிரியதர்சனுக்கு அறிமுகப்படுத்தபட்டார்.  மேலும் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சர்வதேச உலக அழகி  நடத்த வாய்ப்பு அளித்தனர்.

ஹாலிவுட் திரைப்படங்களான மேன் ஆன் எ லெட்ஜ், ப்ராவல் இன் செல் பிளாக் 99, பாலிவூட் ஹீரோ (எஸ். என். எல். ஸ்டார் கிறிஸ் கட்டனுக்கு ஜோடியாக நடித்தார்.) பிளேவர்ஸ், ஹைடிங் திவ்யா, பார்க் ஷார்க்ஸ், பாலிவுட் பீட்ஸ், நைட் ஒப் ஹெனா, எனிதிங் போர் யூ, ட்ரோவிங் வித் சோக், நாட்ஸ் அபேர்ன் என்பவற்றில் நடித்தார்.  கமல் ஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவை தமிழ், இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன. டொலிவுடில் ராஜ சேகர் நடித்த பி. எஸ். வி. கருடா திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஜாவத் ஜாஃப்ரியுடன் பஜாஜ் கி லெஹ்ரன் என்ற இந்திய திரைப்பட நிகழ்ச்சியின் சேனல் வி யின்  பிபிஎல் ஓயிற்கான தொகுப்பாளராக பணியாற்றினார்.

இத்தாலியின் மிலானை மையமாக கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியான சீ டிவியின் ஜாகோ அவுர் ஜீட்டோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பூஜா மத்தூர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மிசுரியில் செயின்ட் லூயிஸில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள். பூஜாவின் தந்தை டெஹ்ரோனையும், தாய் லக்னோவையும் சேர்ந்தவர்கள்.[1] பூஜா வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் அரச அறிவியல், நிதி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார்.[1] மேலும் இவர் இந்திய பாரம்பரிய கலைகளான பரத நாட்டியம், குச்சிபுடி, கதக் ஆகிய கலைகளில் பயிற்சி பெற்றவர்.[1] 1995 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுஎஸ்ஏ மகுடம் சூடினார்.[2][3]

பணி[தொகு]

1997 ஆம் ஆண்டு கே. ஆர் இன் தமிழ் திரைப்படமான காதல் ரோஜாவே திரைப்படத்தில்  ஜார்ஜ் விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் தயாரிப்பு பணிகளின் தாமதங்களால் 2000 ஆம் ஆண்டில் வெளியானது. தமிழ் திரையுலகில் பெரியளவில் நடிகையாக பிரபலமாகவில்லை.[4] மேலும்1997 ஆம் ஆண்டில்  விஐபி திரைப்படத்திலும், சித்ரா லட்சுமணனின் இயக்கத்தில் கார்த்திக் நடித்த சின்ன ராஜா திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி பின் விலக்கப்பட்டார்.[5]

பூஜா "1001 ஆடிஷன்ஸ்" என்ற குறும்படத்தை தயாரித்தார். இந்த குறும்படம் எட்டு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டது. மேலும்  இது செருமனிய நடந்த ஸ்டட்கர்ட் திரைப்பட விழாவில் "சிறந்த குறும்படத்திற்கு" பரிந்துரைக்கப்பட்டது.[6] "ஷூட் மை லைஃப்" என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். பம்பாய் ட்ரீம்ஸ், வெரிசோன், டாட்ஜ், பேர்ல் விஷன், நியூயார்க் லாட்டரி, டாடா ட்ரூ ரூட்ஸ், ஏஓஎல் டைம் வார்னர் மற்றும் அவுட் பேக் ஸ்டீக்ஹவுஸ் ஆகிய தேசிய தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றினார்.[7]

2003 ஆம் ஆண்டில் பிளேவர்ஸ் திரைப்படத்திற்காக  ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் வளர்ந்து வரும் நடிகை விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் இந்திய  சீ டிவியின் இரவு நேர நேரடி வினாடி வினா நிகழ்ச்சியை தொகுத்தார். 2008 ஆம் ஆண்டில் ஐ.எஃப்.சி.யில் பாலிவுட் ஹீரோ என்ற இசை நகைச்சுவை குறுந்தொடரில் தோன்றினார். சட்டர்டே நைட் லைவ் என்ற தொடரின் மூன்று பகுதிகளிலும் நகைச்சுவை நடிகர் கிறிஸ் கட்டனுக்கு ஜோடியாக நடித்தார். 2000 களின் பிற்பகுதியில், ஹம் டிவியில் பாகிஸ்தான் தொலைக்காட்சி நாடகமான  இஷ்க் ஜூனூன் திவாங்கியில் தோன்றினார். கோலிவுட் துறையில்  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் ஜோடியாக விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.[7][8]

திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி
2000 காதல் ரோஜாவே பூஜா தமிழ்
2003 மெஜிக் மெஜிக் 3டி தீப்தி தமிழ்

மலையாளம்

2004 ப்ளேவர்ஸ் ரச்சனா ஆங்கிலம்
2005 நைட் ஒப் ஹெனா ஹவா
2006 ஹைடிங் திவ்யா பலுனி சா
2009 பாலிவுட் பீட்ஸ் லட்சுமி
நாட்ஸ் அர்பன் ரச்னா
பார்க் சார்க்ஸ் ப்ரி
2010 எனிதிங் போர் யூ உமா கிருஷ்ணன்
அஞ்சனா அஞ்சனி பெஸ்டோ இந்தி
ட்ரோவிங் வித் சோக் ஜாஸ்மின் ஆங்கிலம்
2012 மேன் ஒன் லட்ஜ் நினா
2013 விஸ்வரூபம் டாக்டர் நிருபமா விஸ்வநாத் தமிழ்
விஸ்வரூபம் 2 இந்தி
2015 உத்தம வில்லன் கற்பகவல்லி தமிழ்
2016 மீன் குழம்பும் மண் பானையும் மாலா
2017 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
பிஎஸ்வி கருடா வெகா சுவாதி தெலுங்கு
ப்ரவ்ல் இன் செல் பிளொக் 99 டென்சி பவ்தர் ஆங்கிலம்
2018 விஸ்வரூபம் 2 டாக்டர். நிரூபமா விஸ்வநாத் தமிழ்
விஸ்வரூபம் இந்தி
TBA தி இன்விசிபல் மார்க்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_குமார்&oldid=2919300" இருந்து மீள்விக்கப்பட்டது