பூஜா காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஜா காந்தி
பிறப்புஅக்டோபர் 7, 1983 (1983-10-07) (அகவை 40)
பஞ்சாப், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003; 2006-நடப்பு

பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.

பிறப்பும் வளர்ப்பும்[தொகு]

பூஜா காந்தி மீரட் [5] இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி ராதிகா காந்தி கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார்

திரைப்பட வாழ்கை[தொகு]

பூஜா காந்தி விளம்பர மாடலாக டிவி யில் தோன்றினார் . இதை தொடர்ந்து வங்காள படமான டோமெக் ஸலாம் திரைப்படத்தில் 18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட [[தமிழ் திரைப்படமான கொக்கி யில் நடித்து புகழ் பெற்றார் . இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. [6]

இவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த முங்காரு மேல் . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி [11] என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் முங்காரு மேல் என்றே அழைக்கப்பட்டார்

கன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.

பூஜா காந்தி இவ்விதமாக விரைவில் 50 வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் .

சர்ச்சைக்குள்ளான அபிநேத்ரி[தொகு]

நடிகை பூஜா காந்தி மீது மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகள் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அபிநேத்ரி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின் குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல் மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது. கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். என்றாலும் இந்த படம் கல்பனா தற்கொலை செய்து கொண்ட இடத்திலே படமாக்கப்பட்டு ,சுமாரான வெற்றியையும் பெற்றது

புதிய சர்ச்சை[தொகு]

நடிகை பூஜா காந்தி தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகைபூஜா காந்தி தலைமறைவாகி விட்டார்.பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.

அரசியலும் ,கட்சி தாவலும்[தொகு]

பூஜா காந்தி மத சார்பற்ற ஜனதா தளத்தில் 2012 இல் ஜனவரி 18 இல் இணைந்தார் . பின்னர் அப்போதைய ஆளும் கட்சி கர்நாடக ஜனதா கட்சி எடியூரப்பா தலைமையில் 2013 சட்டசபைக்கு போட்டியிட்டு ரெய்ச்சூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்

சொந்த வாழ்க்கை[தொகு]

பூஜா காந்திக்கும் ஆனந்த் கௌடா என்பவருக்கும் திருமண தாம்பூலம் நடைபெற்றது .என்றாலும் திருமணம் தடைபட்டு நின்றது . சென்ற வருடம் 2016 நவம்பர் 27 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்து இனிப்புகளும் வழங்கினார் .அப்போது கிரிக்கெட்வீரர் ஐயப்பாவுடன் ஆழ்ந்த காதல் கொண்டிருப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது .

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_காந்தி&oldid=3854025" இலிருந்து மீள்விக்கப்பட்டது